Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 7 ஆம் நாள் வியாழக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - சுபம்

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - உற்சாகம்

கடகம் - சிரமம்

சிம்மம் - நிதானம்

கன்னி - லாபம்

நல்ல நேரம்:

காலை: 12.00 - 01.00 வரை

மாலை: -

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

எதிர்காலத்தை பற்றிய கவலை ஏற்படும். பணியிடத்தில் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளின் உடனிருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து மூலமாக அனுகூலப் பலன் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டிய நாள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

நீண்ட நாட்களாக பொன், பொருள் வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்றைய தினம் வாங்குவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய நபரின் சந்திப்பு ஏற்படும். பணியிடத்தில் உங்க திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் வருமானம் சுமாராக தான் இருக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த கடன் வசூலாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். அனுகூலம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

அதிர்ஷ்டமான நாள். எந்த காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். வியாபாரத்தில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் சூப்பரான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்காது. சில விஷயங்களில் கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். இதனால், கவலை அடையலாம். இருப்பினும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றிகளை அடைய முடியும். பணியிடத்தில் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டிய நாள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்க துணையுடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், பிரச்சனை உங்களுக்கே. பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. சளி அல்லது இருமல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

பொறுமையை சோதிக்கும் நாள். அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலன்களை பெறலாம். நெருங்கியவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தேவையில்லா பிரச்சனை தான். பணியிடத்தில் சமயோசித புத்தியை பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நிதிநிலைமை சுமாராக தான் இருகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கலாம். உணவு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.. 22.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிலருக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பத்திரம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [22.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்