Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 8 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - அலைச்சல்

விருச்சிகம் - பிரச்சனை

தனுசு - சவால்

மகரம் - அனுகூலம்

கும்பம் - இன்பம்

மீனம் - வரவு

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [23.12.2022]

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

அனுபவ அறிவின் மூலம் தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாடு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் கைகூடும். பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. குடும்பத்தில் உறவினர்களால் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தையும் அகந்தை பேச்சையும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வருத்தத்தை அளிக்கும். கடன் வாங்க வாய்ப்புள்ளது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

பெயர் தெரியாதவர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொது இடங்களில் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது. இல்லையென்றால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். பணஇழப்பிற்கு வாய்ப்புள்ளது, உஷாராக இருங்கள். பணியிடத்தில் தலைக்கு மேல் வேலை இருக்கும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காது. கோபத்தை கட்டுப்படுத்துவது உத்தமம். துணையுடன் கிண்டலான அணுகுறையை தவிர்க்கவும். கண்களில் கவனம் தேவை. பிரச்சனை!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

எந்த காரியத்திலும் சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது. புத்தியை உபயோகித்தால், வெற்றி நிச்சயம். சிலருக்கு பொன், பொருள் வாங்குவதற்கான யோகம் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரிடம் அகந்தை பேச்சை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் ஏற்படும். ஆன்மீக வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்று தரும். சவால்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

புதிய முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும். எந்த செயலையும் சுறுசுறுப்பாகவும் ஈடுபாட்டுடனும் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விருந்தினர்கள் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

சுய முன்னேற்றத்திற்க்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே இருந்துவந்த பிரச்சனை விலகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து போவது நல்லது. வெளியிடங்களில் அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவு தாராளமாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா விருச்சிகத்துக்கு கஷ்டம்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் சவால்களை சந்திக்க வேண்டிய இருக்கும். வெற்றியை பெற திட்டமிடல் அவசியம். துணையுடன் பேசும் போது பொறுமை இழப்பீர்கள். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வீடு, மனை வாங்வது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்