Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023

Gowthami Subramani Updated:
சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image.

சூரிய கிரகணம் நடைபெற உள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதலாவதாக வரும் சூரிய கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

சூரிய கிரகணம் 2023 தேதி

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது, வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தருகிறது. மேலும், இந்த கிரகணம் ஆனது இந்தியாவில் தென்படாது எனவும், பெரும்பாலும் தெற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

சூரிய கிரகணம் 2023 நேரம்

இந்திய நேரப்படி, ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியான வியாழக்கிழமை அன்று, காலை 07.05 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். மேலும், 08.07 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தின் நடுப்பகுதி காலை 09.47 மணிக்கு நிகழும் மற்றும் மதியம் 12.29 மணிக்கு கிரகணம் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன் படி, சூரிய கிரகணம் நிலவக் கூடிய மொத்த காலம் 5 மணி 24 நிமிடங்கள் ஆகும். இந்த சூரிய கிரகணம் நடைபெறும் வேளையில், சூரிய பகவான் அதன் சொந்த ராசியான மேஷ ராசியில் இருக்கப் போகிறார். இதனால் பல்வேறு ராசிக்காரர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் காணலாம்.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

கன்னி

இந்த சூரிய கிரகணமானது கன்னி ராசியினருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். ஆனால், அதே சமயம் பயணத்தில் மிகக் கவனமாக இருப்பது அவசியம். மேலும் கன்னி ராசியினர்கள் பொருள்கள் இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால், நஷ்டம் ஏற்படலாம். இது போன்ற சூழல், உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், நீங்கள் சேமித்த பணத்தில் இருந்து செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

மகரம்

இந்த சூரிய கிரகணம் ஆனது, மகர ராசிக்கு சாதகமாக இல்லாமல் உள்ளது. சூரிய கிரகணம் மகர ராசிக்கு நான்காவது வீட்டில் இருப்பதால், தாயின் உடல்நிலையில் சற்று கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பணி தொடர்பாக, மன அழுத்தம் ஏற்படலாம். உங்களின் உடல்நிலையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூச்சு விடுவதில், சிரமம் ஏற்படலாம். இதிலிருந்து விடுபட ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

மேஷம்

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது மேஷ ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். மேலும், சூரிய கிரகணத்தின் பாதகமான பலன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். பொருளாதாரத்தில் கவனமுடன் இருப்பது  அவசியம். தொழிலில் சிக்கல்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மன அழுத்தம், எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால், உங்கள் ராசிக்கு வியாழன் வருகையால் நிம்மதி கிடைக்கும்.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

விருச்சிகம்

விருச்சிக ராசியின் ஆறாம் வீட்டில் சூரிய கிரகணம் நடக்கிறது. இதனால், எதிரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உடனிருப்பவர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. சளி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சூரிய கிரகணத்தால், இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. | Surya Grahan Rashi Effects 2023 Representative Image

சிம்மம்

சூரிய கிரகணத்தால், பாதிக்கப்படும் ராசிகளில் சிம்ம ராசியும் உள்ளது. சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். கிரகணத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பின், வியாழன் உங்களுடைய அதிர்ஷ்ட ஸ்தானத்திற்குச் செல்கிறார். இந்த நிலையில், உங்களுக்கு நன்மை, தீமை இரண்டும் இருக்கும். அடுத்த 2 மாதங்களுக்கு பொறுமையாக இருப்பது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்