Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 12 ஆம் நாளுக்கான [25 ஏப்ரல் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உங்களுடைய அனுசரனையான அணுகுமுறை வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். பல வாய்ப்புகள் தேடி வரும். சின்ன வாய்ப்பாக இருந்தாலும் பயன்படுத்தி கொள்ள முயற்சிப் பண்ணுங்க. வியாபாரத்தில், தொழிலில் அதிக லாபம் ஈட்டும் நாள்.பணியிடத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் முடித்து, மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். அதனால், எதிலும் அவரசம் காட்டாமல், நம்பிக்கையோடு கையாளுவது நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் வந்து நிற்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். வெட்டி செலவுகளை தவிர்க்கவும். அண்டைவீட்டாரால் வீண் விவாதம் ஏற்படும். வார்த்தையில் கணிவு வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு உறவினர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கவனக்குறைவால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துணையால் குடும்பத்தில் புதுப்பிரச்சனை ஓங்கும். நீங்க அட்ஜஸ் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். ஆகமொத்தம் சோதனைமிகுந்த நாள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 9

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதை செய்தாலும் கவனத்தோடு செய்ய வேண்டும். யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் அதிகம் இருக்க வேண்டும். நீங்கபாட்டுக்கு ஏனோதானோ என்று பேசிவிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். துணையிடம் இருந்த பிரச்சனை விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். பணவிஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். நண்பர்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் ஏமாற்றத்தை தரலாம். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 6

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய தொழிலில் முதலீடு செய்ய உகந்த நாள்.  உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். முடிந்த வரை சுய முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் இடச்சூழல் அற்புதம். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தம் விளையாடும். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள், மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி வாழ்க்கையை நடத்த முயற்சியுங்கள். தாய்மாமன் வழியில் நன்மை உண்டு. நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உங்கள் விருப்பங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும். தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த பயம் விலகும் நாள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரம் அமோகமாக இருக்கும். மறைமுக எதிர்களால் சிக்கல் வந்து விலகும். காதலர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை முடிவுக்கு வரும். வராத கடன்கள் வந்தடையும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. பணியிடத்தில் மற்றவர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பெற்றோரிடமும், துணையுடனும் சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். சிலருக்கு தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்டு நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் வழியில் இன்ப செய்தி வந்து சேரும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

குடும்ப வளர்ச்சிக்கான செயல்களை ஆரம்பிக்க சிறந்த நாள். உடன் பணிபுரிவர்கள் உங்க திறமையை பார்த்து வியந்து பாராட்டுவார்கள். முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் அளிக்கும். யாராவது எனக்கு பிரச்சனை என்று உங்ககிட்ட வந்தா அமைதியாக ஒதுங்கிக் கொள்வது நல்லது. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். விலங்குகளால் ஆபத்து உண்டு, ஒதுங்கி இருங்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்படவும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும், பார்த்து பக்குவமாக செலவு செய்யவும். தொழில் மந்தமாக தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிலருக்கு எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் மனதில் குழப்பம் குடிக்கொள்ளும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும், கவனமும் தேவைப்படும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திடீர் விருந்தனர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. செலவுகள் குறையும் நாள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த சந்திப்பீர்கள். பணியிடத்தில் சகபணியாளர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகி, ஒத்துழைப்பு கிடைக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்