Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 10 ஆம் நாளுக்கான  [23 ஏப்ரல் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

யார் என்ன செய்தலும் எரிச்சலுடன் காணப்படுவீர்கள். மனதில் ஏதோ ஒரு குழப்பம், அதனால் கடுகடுவென நடந்துக்கொள்வீர்கள். தொழிலில் உங்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள் பிரச்சனை செய்வார்கள். உடல் நலத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வந்தால் கவனமாக முடிவெடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளுங்கள். பகை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 
அதிர்ஷ்ட எண்:  2

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தொழிலில் உங்களுக்குபோட்டியாளர்காக இருந்தவர்கள் விலகுவார்கள். கல்வி கற்கும் மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டு இலட்சியத்தை அடைவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமிதம் கொள்வார்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த உடல் ரீதியான தொந்தரவுகள் குறைய ஆர்மபிக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  
அதிர்ஷ்ட எண்:  8

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

ஆசை படும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்புவர்களுக்கு வாய்ப்புகள் அமையும். வேலை மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இடமாற்றத்திற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். உறவினர்களால் சுப காரியங்கள் நடைபெறும். செலவு மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்  
அதிர்ஷ்ட எண்:  4

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணிபுரியும் இடத்தில் கடினமான வேலையைக் கூட சாமர்த்தியமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். இத்தனை நாளாக உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் உங்களை வந்து சேரும். மாணவர்கள் உயர்கல்வி குறித்த தெளிவான சிந்தனையுடன் செயல்படுவார்கள். ஆராய்ச்சி சம்மந்தமான எண்ணங்கள் தோன்றும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு நல்ல நிம்மதியான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொள்வீர்கள். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்  
அதிர்ஷ்ட எண்:  2

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீங்கள் எதிர்பார்காதவர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். எதிர்பாராத பயணத்தால் லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் நன்மை நடக்கும். பிடித்ததை செய்து மகிழ்வீர்கள். மற்ற நாட்களை விட புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் அமையும். உடல் நிலை நன்றாக இருக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்   
அதிர்ஷ்ட எண்:  1

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

முதலீடு வர்த்தகத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையாற்றம் இடங்களில் விவாதங்களை குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பாலின நட்பால் சிக்கல் ஏற்படலாம். தம்பதிகளுக்கு இடையே இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். சில விஷயங்களில் இருந்த குழப்பங்கள் தீரும். பணிபுரியும் இடத்தில் உங்களை அங்கீகரித்து பாராட்டுவார்கள். மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களை நிரூபிப்பார்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள் 
அதிர்ஷ்ட எண்:  9

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம். அனைவரையும் மரியாதையுடன் நடத்துவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். கண் சம்மந்தமான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்  
அதிர்ஷ்ட எண்:  4

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உங்கள் முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கான பலன் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும், செலவுகளும் சற்று அதிகரிக்கும். தடங்களால் நின்ற விஷயங்கள் நடந்து முடியும். இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் அனுசரித்து போனால் நல்லது. குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்  
அதிர்ஷ்ட எண்:  8

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தொழிலில் நல்ல முன்னேற்றம் அமையும். லாபம் அதிகரிக்கும். பார்வை சம்மந்தமான பிரச்சனை வரலாம். மனதில் குழப்பங்கள் வந்து நீங்கும். விடாமுயற்சியுடன் செயல்படுங்கள், அதற்கான பலன் சற்று மெதுவாக கிடைக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை, அதனால் உங்களுக்கு தேவை இல்லாத இடங்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். முதலீடுகளில் அதிக கவனத்துடன் செயல் படுங்கள். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு  
அதிர்ஷ்ட எண்:  3

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத தன வரவு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திடீர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரின் தேவைகளைத் தெரிந்துக்கொண்டு அதனை பூர்த்தி செய்வீர்கள். பணி புரியும் இடத்தில் உங்களுக்கு மரியாதை ஏற்படும்.  தடங்களால் நின்று போன முக்கியமான விஷயம் மீண்டும் தொடங்கும். நன்மையான நாளாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 
அதிர்ஷ்ட எண்:  5

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயத்திற்கு முக்கிய முடிவு எடுக்கும் நாள். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் காணாமல் போவார்கள். வேலை செய்யும் இடத்தில் மற்ற தொழிலாளிகளின் உதவு கிடைக்கும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். தம்பதிகளுக்கு இடையே அந்யோனியம் அதிகரிக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 
அதிர்ஷ்ட எண்:  8

பேசாம இருக்குற வரைக்கும் எல்லா நல்லா இருக்கும்...இருந்தாலும் அது கஷ்டம்!| 23 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதில் ஒரு குழப்பத்துடன் நடந்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் பேச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு சார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று நிதானமாக செயல்படுங்கள். உங்களை விட்டு விலகியவர்கள் உங்களை விரும்பி வருவார்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். யோசிக்காமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 
அதிர்ஷ்ட எண்:  3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்