Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 11 ஆம் நாளுக்கான [24 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.00 - 07.00 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். பயணத்தின் போது பணம் ஜாக்கிரதை. வீண் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகம். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் கிடைக்கும். சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சந்தோஷத்திற்கு குறை இருக்காது. பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும். புதிய பெண்களிடம்  பேசும் போது மட்டும் கவனம் தேவை. சிலருக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். நீண்ட நாள் மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அச்சம் விலகும் நாள். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

செலவுகள் அதிகரித்து காணப்படும். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள் அல்ல. வியாபாரம் சுமாராகவே இருக்கும். இழுபறியாக இருந்து வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவீர்கள். வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டிய நாள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நண்பர்களால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விவசாயம் சம்பந்தமான வியாபாரம் செய்வோருக்கு லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கழித்து காதலர்கள் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்களுக்கு தேடி போய் உதவுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மலை சம்பந்தமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு சிறப்பான நாள். பிரயாசை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பணவரவும் அமோகமாக இருக்கும். பொன், பொருள் வாங்க யோகம் உண்டு. எதிர்பாராத வாய்ப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். காதலர்களுக்குள் இருந்த சண்டை முடிவுக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் சின்ன பிரச்சனை தலைதூக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை உண்டு. புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை தரும். சிலருக்கு எதிர்பாரா பயணம் மேற்கொள்வீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள். வேலை செய்யும் இடத்தில் உங்க நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணஉதவி எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பு. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். துணையின் உடல்நிலை அக்கறை காட்ட வேண்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். தொழிலில் போட்டிகள் விலகும். தாய்வழி உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். நீண்ட நாள் கழித்து பிரியமானவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி பந்தங்களால் செலவுகள் தேடி வரும். வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். தம்பதிகளிடையே இருந்த மனஸ்தாபம் விலகி, அன்பு அதிகரிக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உறவினர்கள் வழியில் திடீர் என்று நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் சின்ன முயற்சிக்கூட பெரிய வெற்றியை கொடுக்கும். ஆசைகள் நிறைவேறும் நாள். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசிக்காரர் நண்பர்களால் வீண் பிரச்சனையில் சிக்குவார்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் கவனம் தேவை. பணியிடத்தில் சகஊழியர்களை பகைத்துக் கொள்வீர்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்