Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 08 ஆம் நாளுக்கான [21 ஏப்ரல் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 12.30 - 01.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. செய்யும் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 3

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எதிர்பாரா சில செலவுகள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். செலவுகள் குறையும் நாள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் நடந்து முடியும். உறவினர்கள் மத்தியில் அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு நண்பர்களால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். திடீர் ஆன்மீக நாட்டம் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டு. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனை குறையும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது, அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். தனவரவுகள் கிடைப்பதில் இழுபறியான சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களால் புது பிரச்சனை தலைதூக்கும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 9

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் கிடந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டு உண்டு. வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தினர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை வெற்றிக் கொள்வீர்கள். வீடு, மனை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.. கனவுகள் நனவாகும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். அடுத்தவரின் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். முயற்சிகள் வெற்றி தரும். வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்