Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image.

ஜோதிடத்தில், மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். இவர், ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வது வழக்கம். அதன்படி, 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நாளில் சூரிய பகவான் தன் ராசியை மாற்றி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி ஆகிறார். அதன்பின்னர், ஜனவரி 14, 2023 அன்று இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.  

பொதுவாக, சூரிய பெயர்ச்சியில் சூரிய பகவான் சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையும் மாறி மாறி வழங்குபவர். அந்தவகையில், இம்மாதம் கிரகங்களின் தலைவனாக இருக்கக்கூடிய சூரிய பகவான் தனது ராசியை  மாற்றிக்கொள்வதால் 12 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்காரர்கள் ராஜயோகத்தை பெறப்போகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். 

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image

மேஷம்: 

சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டு வரப்போகிறது. ரொம்ப நாட்களாக இருந்து வந்த பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. பணியில் இருந்த தடைகள் விலகும். உங்களுக்கு எதிராக திட்டம்போடும் இரகசிய எதிர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மனதில் தைரியம், தன்னம்பிக்கை, துணிவு அதிகரிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் உங்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதகமான பல பலன்களை வழங்கவுள்ளது.

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image

மிதுனம்:

சூரியனின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றமும் பணவரவும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, கணவன், மனைவி இடையே அன்பும், புரிந்துணர்வும் அதிகரிக்கும். பணியிடத்தில் வருமானம் கூடும். 

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image

கன்னி:

இந்த சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் இருந்து வந்த பணப்பிரச்சனைகள் விலகி, லாபம் ஈட்டுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். இதனால் வீடு, மனை வாகனம், வாங்கவும் யோகம் உண்டு. 

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image

சிம்மம்:

சூரியனை ராசி அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினரே.. உங்களுக்கு பொன்னான காலம் தான். அதாவது, உங்க ராசி அதிபதி உங்களுக்கு ஏராளமான பலன்களை வாரி வழங்கப்போகிறார். தொட்டது துலங்கும். தோல்வியையே எப்போதும் சந்திக்கும் உங்களுக்கு வெற்றியின் பக்கத்தை காட்டவுள்ளார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கைக்கூடி வரும். 

சூரியன் பெயர்ச்சி 2022: சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? | Suriyan Peyarchi 2022 Palan in TamilRepresentative Image

தனுசு: 

உங்க ராசிக்கு தான் சூரிய பகவான் பெயர்ச்சி ஆவதால், இது உங்களுக்கு வரப்பிரசாதம் தான். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பட்ட கஷ்டங்களுக்கு பரிசும், பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிலை வலுவாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுக்கான சந்தர்ப்பமும் அமையும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பெரிய தொகையை முதலீடு செய்ய திட்டமிருந்தால் ஏற்ற காலம் இது.

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்