Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image.

கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் இன்று தனுசு ராசியில் பிரவேசிக்க உள்ளார். இதை தனு சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, சூரிய பெயர்ச்சியில் சூரிய பகவான் சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையும் மாறி மாறி வழங்குபவர். அந்தவகையில், இம்மாதம் கிரகங்களின் தலைவனாக இருக்கக்கூடிய சூரிய பகவான் தனது ராசியை  மாற்றிக்கொள்வதால் 12 ராசிகளுக்கு உண்டான பலன்களை பார்க்கலாம். 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

மேஷம்:

பல நாட்களாக தடைப்பட்ட வேலைகள் இந்த காலக்கட்டத்தில் மிக எளிமையாக நடந்து முடியும். பணியிடத்தில் யாராவது எதையாவது கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிறரிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய காலமும் இது தான். எந்த வேலையும் திட்டமிட்டு செய்தால், நன்மைகள் உண்டு. 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

ரிஷபம்:

சூரியன் பெயர்ச்சியால் நீங்க உங்க எதிரிகளை வெல்வீர்கள். வீட்டில் புதிய பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டு. அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருப்பதால், பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகம். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

மிதுனம்:

இந்த காலக்கட்டத்தில் செலவுகள் செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். அரசியல் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் ஒருவித குழப்பம் தோன்றி மறையும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

கடகம்:

இந்த ராசிக்காரர்கள் சமூகப் பணிகளில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பீர்கள். இதனால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். அதிக உழைப்பின் காரணமாக இரவில் களைப்பாக உணர்வீர்கள். மனைவியின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

சிம்மம்: 

சூரியன் பெயர்ச்சியில் பணியிடத்தில் உங்கள் பாராட்டும், பதிவி உயர்வும் ஏற்படும். அல்லது பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி கொடுப்பார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி தேடி வரும். பல நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பல வேலைகளையும் முடித்து காட்டுவீர்கள். 
 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

கன்னி: 

தொட்டது துலங்கும் காலம். சூரியன் பெயர்ச்சியால், புதிய முயற்சிகளில் முழு வெற்றியைப் பெறுவீர்கள். உங்க நிதி நிலையும் முன்பை விட சிறப்பாக இருக்கப் போகிறது. சமூகத்தில் நற்பெயர் உயரும். சிலருக்கு புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 
 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

துலாம்: 

சூரியன் பெயர்ச்சியால், வியாபாரத்தை பெருக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். லாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் குறையும். சமூகத்தில் புகழ் உயரும். இருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் உங்களின் சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்படலாம். 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

விருச்சிகம்:

உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கேட்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள். நீங்க மற்றவர்களுக்கும் உதவி செய்வீர்கள். இந்த காலக்கட்டத்தில் மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

தனுசு:

இந்த காலக்கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், ஆபத்தான வேலைகளை செய்யும் போது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான எந்த பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம். இக்கட்டான நேரத்தில் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். தனிமையை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

மகரம்:

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், குடும்பத்தில் ஒருவருக்கு விபத்து அல்லது உடல் நிலை சரியில்லாமல் போகலாம். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் பணப் பரிவர்த்தனை வேண்டாம். வாகனத்தில் செல்லும்போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

கும்பம்:

இந்த காலக்கட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும். நீங்க கொடுத்த கடன்கள் திருப்பி வரும். இதனால், சேமிப்பு உயரும். உங்க மகளுக்கோ அல்லது மகனுக்கோ திருமணத்திற்கு வரன் வர வாய்ப்புள்ளது. 

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பிறந்தாச்சு யோகம்.. | Suriyan Peyarchi 2022 Palangal in TamilRepresentative Image

மீனம்:

சூரிய பகவான் சஞ்சாரத்தால், அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான். வேலை தேடும் மீனம் ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்