Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் நாள் வியாழக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - பொறுமை

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - நலம்

கடகம் - செலவு

சிம்மம் - எதிர்ப்பு

கன்னி - தடை

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.00 வரை

மாலை: -

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப சூழலுக்காக கடன் வாங்குவீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். எந்தச் செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பணியிடத்தில் பதட்டம் ஏற்படும், இதனால் சாதகமான சூழ்நிலை ஏற்படாது. இருப்பினும், சிலருக்கு பதவி உயர்வுக்கான சூழல் ஏற்படும். மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்கள் கட்ட முடியாமல் தவிர்த்த கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் உயரும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். செலவுகள் அதிகரிக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

ஆன்மீக ஈடுபாடுகளில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக மன ஆறுதல் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேறுவதில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். அதேபோல், விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உத்தமம். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளநிலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.. இல்லைனா அனத்தம் உங்களுக்கு தான்.. 15.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணவரவு கைக்கு வரும். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்து காரியங்கள் நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்க்கொள்ள நேரும். துணையுடன் அனுசரித்து நடந்துக்கொண்டால் அனைத்தும் சிறப்புடன் நடக்கும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [15.12.2022]

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்