Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In Tamil

Gowthami Subramani Updated:
2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image.

நம் வாழ்வில் என்றாவது நல்லது நடக்குமா என எதிர்பாத்து காத்துக்கொண்டே இருப்போம். இந்த ஆண்டிலாவது திருமணம் நடக்குமா, பதவி உயர்வு கிடைக்குமா..? குழந்தை வரம் கிடைக்குமா..? ஊதிய உயர்வு கிடைக்குமா.? இது போன்ற எண்ணற்ற விஷயங்கள் இன்று நடக்கும், நாளை நடக்கும் என நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அது கிடைக்கவில்லை எனும் போது, நம்மிடம் உள்ள நம்பிக்கையைத் தளர விடக் கூடாது. ஒரு வகையில் நமது ராசியில் உள்ள கிரகங்களின் பெயர்ச்சி வகையிலும் அமையக் கூடியதாக உள்ளது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டில் யாருக்குப் பணியில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க உள்ளது என்பது பற்றிப் பார்க்கலாம்.

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image

துலாம்

இந்த 2023 ஆம் ஆண்டில், அதிர்ஷ்டராசிகளுள் ஒருவராக விளங்குவதில் துலாம் ராசியும் ஒன்று. துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமைகிறது. இந்த ஆண்டு அவர்கள் நினைக்கும் அனைத்தும் நடக்கப் போகும் காலம். அதே சமயம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை துலாம் ராசிக்காரர்கள் யோகக் காரர்களாக அமைவார்கள். இந்த 2023 ஆண்டின் துவக்கத்தில் வேலையில் மாற்றங்களைச் சந்திக்கும் இவர்கள் நல்ல பலன்களையே பெறுவர்.

இதுவே, நீண்ட நாள்களாக வேலை தேடும் நபராக இருந்தாலும், அவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு முழுவதுமே துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக அமைகிறது.

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image

மீனம்

இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான ஆண்டாக அமைகிறது. தொழில் மூலம், அமோக வெற்றி கிடைக்கும் ஆண்டு இந்த ஆண்டு. குறிப்பாக பணியிடத்தில் புகழையும் பாராட்டையும் பெறுவீர்கள். வெற்றியின் பார்வை உங்கள் மீது இருக்கும்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், அதாவது முதல் மாதமான ஜனவரியில் மீன ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். பணியிடத்தில் கவனத்துடன் செயல்பட்டால், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image

மிதுனம்

இந்த ஆண்டு தொழிலில் நல்ல வெற்றியுடனும், முன்னேற்றத்துடனும் காணப்படும். இந்த ஆண்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். இதனால், தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல ஒரு பலனைத் தரக்கூடியதாக அமைகிறது.

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image

மேஷம்

வெற்றி..! வெற்றி..! வெற்றியோ வெற்றி..! எந்த இடத்தில் கால்வைத்தாலும், வெற்றியும் புகழும் பெற்று சந்தோஷமாக வாழக்கூடிய அனைத்து சிறப்புகளும் உள்ளது. இந்த ஆண்டு முழுவதுமே தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் நடக்க உள்ளது.

மேலும், வேலை செய்யும் இடத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் அனைத்தும் விலகி, மகிழ்ச்சியான காலமாக அமையும். நீங்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இரண்டுமே கிடைக்கும். இத்துடன் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் முழுமையாகக் கிடைக்கும்.

2023-ல் இந்த ராசிக்காரங்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்.. ஜாலி தான்! | Career Horoscope In TamilRepresentative Image

சிம்மம்

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அமோக வெற்றி கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்பிற்கான பலனை இந்த ஆண்டு பெறுவீர்கள். மேலும், இந்த ஆண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த ஆண்டில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

ஜனவரி மாதம் சனி உங்கள் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செல்வதால் தொழில் அமோகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்துடன் செல்வம் படிப்படியாக அதிகரிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்