Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 1 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி]  நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - அனுகூலம்

விருச்சிகம் - நலம்

தனுசு - லாபம்

மகரம் - நஷ்டம்

கும்பம் - கோபம்

மீனம் - நன்மை

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை 

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [16.12.2022]

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

அதிர்ஷ்டமான நாள். அனைத்து செயலிலும் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். சகஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவும் அற்புதமாக இருக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

பொன், பொருள் சேர்க்க உண்டாகும். வியாபார பணிகளில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். விருப்பங்கள் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதனால், சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால், அதுவே உங்களுக்கு ஆப்பாக திரும்பும். பணியிடத்தில் உங்களுக்கு கோபம் ஏற்படுத்தும் விதமாக சில விஷயங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். இணையம் சார்ந்த தொழிலில் போட்டி அதிகரிக்கும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… 16.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். ஆரம்பத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். இருப்பினும், வெற்றி உறுதி. விருப்பங்கள் நிறைவேறும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுபகாரியங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் செலுத்தவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்