Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 1 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - பொறுமை

ரிஷபம் - செலவு

மிதுனம் - வரவு

கடகம் - நிதானம்

சிம்மம் - கவலை

கன்னி - அலைச்சல்

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

மார்கழி மாதம் நாள் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துணையுடன் கிண்டலான பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எந்த செயல்களை செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும். பணியிடத்தில் சுமை அதிகரிக்கும், இதனால் பதட்டமாக உணர்வார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

பணியிடத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். இதனால், சேமிப்பு உயரும். மற்றவர்களை பற்றிய கருத்துகளில் கவனம் தேவை. உறவினர்களின் வழியின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்யவும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சிலருக்கு சொத்து பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.  துணையுடன் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. செலவுகள் தேடி வரும், திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படும், இதனால் கவலையில் இருப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும், அனுசரித்து போவது நல்லது. பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுங்கள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: மார்கழி முதல் நாளே இந்த ராசியினருக்கு யோகம் தான்.. 16.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவித செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. கணவன், மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [16.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்