Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,917.31
268.69sensex(0.36%)
நிஃப்டி22,409.95
73.55sensex(0.33%)
USD
81.57
Exclusive

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023

Nandhinipriya Ganeshan Updated:
2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழிக்கு பொருள் வெவ்வேறு குணம் படைத்த ஆண், பெண் ஒன்றாக இணைந்து, ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கை முழுவதும் துணையாகவும், ஆதரவாகவும் இருப்பது தான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த திருமணத்தை நாம் நினைத்தவுடன் நடத்திவிட முடியாது. ஏனென்றால், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. எனவே, ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் படி திருமண யோகம் இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும். 

ஒருவேளை திருமண யோகம் இல்லாத நிலையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருந்து தான் ஆக வேண்டும். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிகளுக்கு திருமண யோகம் உண்டு என்பதை பார்க்கலாம். 

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image

ரிஷபம்:

மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை சந்திக்கப் போகிறீர்கள். ரொம்ப நாட்களாக காதலி/காதலனை தேடி அலைபவர்களுக்கு நல்ல வாழ்க்கை துனை கிடைப்பார்கள். ஏப்ரல் மாதத்திற்குள் காதல் குறித்த குட் நியூஸ் உங்கள் காதுக்கு வந்து சேரும். அதேபோல், ஏற்கனவே காதலிப்பவர்கள் தங்கள் காதலன்/காதலியை உங்க வீட்டிற்கு அறிமுகப்படுத்த உகந்த காலம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும். குறிப்பாக, பிப்ரவரி அல்லது அக்டோபரில் டும் டும் டும் தான். 

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image

மிதுனம்:

காதல் உறவில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்து கொள்ள சிறந்த காலம். நமக்கெல்லாம் கல்யாணம் நடக்கும் என்று ஏங்கி வெறுத்துப்போனவர்களுக்கு இந்த புதுவருடம் அபாயகரமான நன்மைகளைக் கொடுக்கப்போகிறது. குறிப்பாக, 90ஸ் கிட்ஸ். ஒருவேளை, நீங்கள் சிங்கிளாக இருந்தால் கமிட் ஆவதற்கு அதிக வாய்ப்பும் உள்ளது. 

ஏப்ரல் 22 ஆம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சியால் குரு பகவான் உங்க ராசியின் 11 ஆம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்வதால் அவரின் பார்வை 5 மற்றும் 7 வது வீட்டில் விழுகிறது. இதனால், வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல், காதலிப்பவர்கள் பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தால் இது சரியான நேரம். நிச்சயம் பாசிட்டிவ் பதில் தான் வரும். 

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image

மேஷம்:

குரு மேஷ ராசிக்குள் நுழைவதால், இந்த புத்தாண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். திருமண வயதில் இருக்கும் மேஷ ராசியினருக்கு ஒரு அதிர்ஷ்டமான ஆண்டு. திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் அன்பும், பாசம், நெருக்கம் அதிகரிக்கும். ஆணோ பெண்ணோ ஒன் சைடாக காதலித்துக் கொண்டிருந்தால், தைரியமாக உங்க காதலியிடமோ காதலனிடமோ சொல்லலாம். கண்டிப்பாக க்ரீன் சிக்னல் தான். காதலிப்பவர்களாக இருந்த தைரியமாக வீட்டில் பேசலாம். குறிப்பாக, மார்ச் - ஆகஸ்ட் மாதத்திற்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். 

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image

மீனம்:

நீண்ட நாட்களாகவே திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் மீன ராசிகாரர்களுக்கு இந்த புது வருடத்தில் திருமணத்திற்கான யோகம் உண்டாகும். அந்தவகையில், நீங்க காதலிப்பவராக இருந்தாலோ, திருமணம் செய்துக்கொள்ள காத்திருந்தாலோ அல்லது சிங்கிளாக இருந்தாலோ உங்களுக்கு இந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெற நிறைய வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாமல், இந்த புதுவருடம் உங்களுக்கு அற்புதங்கள் அதிர்ஷ்டம் நிறைந்த சிறப்பான ஆண்டாகவும் இருக்கும். 

ஒருவேளை நீங்க காதலில் தீவிரமாக இருந்தால் காதலின் அடுத்த கட்டத்திற்கு செல்ல சரியான காலமும் இது தான். ஏப்ரல் 22 ஆம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சியின் போது, உங்க ராசிக்கு 2ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுவதால் குடும்ப விருத்தி ஏற்படும். இதுவரை இருந்த திருமணத்தடை விலகி திருமண யோகம் கைகூடி வரும். 

2023-ல் திருமண யோகம் பெரும் அதிர்ஷ்ட ராசிகள்! | Marriage Horoscope 2023Representative Image

துலாம்:

இந்த புத்தாண்டில் நடைபெறவிருக்கும் கிரக பெயர்ச்சியால் உங்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது. ரொம்ப நாட்களாகவே மொரட்டு சிங்கிளாக இருப்பவர்களுக்கும்  4வது மாதத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணை கிடைக்கப்போகிறது. அதேபோல், காதல் ஜோடி உங்க திருமணத்தை உங்க வீட்டில் எடுத்துக் கூறலாம். இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருப்பதால், இரு வீட்டாரும் உங்க கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. 

குருப்பெயர்ச்சியின் போது குருவின் பார்வை 5, 7, 9 வீடுகளில் சிறப்பாக உள்ளதால் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை இருந்த திருமணத்தடை நீங்கும். பொதுவாக காதலில் பிரச்சனை வருவது சகஜம் தான். ஆனால், ஒரு சிலருக்கு உச்சவரம்பை தொட்டு இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான ஆண்டு தான். அதாவது, எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரப்போகிறது. காதல் வாழ்க்கையில் ஒற்றுமை, அன்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு செப்டம்பர் மாதங்களில் திருமணம் நிச்சயம் ஆகக் கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்