Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்.. 17.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 2 ஆம் நாள் சனிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - கவனம்

விருச்சிகம் - சுபம்

தனுசு - இழப்பு

மகரம் - பொறுமை

கும்பம் - சிரமம்

மீனம் - வெற்றி

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை 

மாலை: 05.15 - 06.00 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [17.12.2022]

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

எல்லா விஷயங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். ந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். அதேபோல், மற்றவர்களிடம் உரையாடும் போதும் வார்த்தைகளில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் சில தடைகளும் ஏமாற்றங்களும் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

அனுகூலமான நாள். வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணியிடத்தில் பட்ட கஷ்டத்திற்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகளுக்கு வாய்ப்புள்ளது. அனைவரிடமும் சுமூகமாகப் பழகுவது நல்லது. சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இது கவலையை கொடுக்கும். துணையுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் எப்பவும் போலவே இருக்கும். பயணத்தின் போது பண இழப்பிற்கு வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இழப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

பொறுமையின் சிகரமாக இருந்தால், வீண் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படாது, கவனமாக செயல்படவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். நீங்க அனுசரித்து போவது உத்தமம். அதேபோல், உறவினர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5
 

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  17.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகபணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்