Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று ஆனந்தத்தின் உச்சத்தில் திளைக்கும் அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா! ஆனால் இந்த ராசிக்காரரின் நிலைமை ரொம்ப பாவம் தான்.....! மே 31, 2022 ராசிபலன்..

Manoj Krishnamoorthi May 30, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று ஆனந்தத்தின் உச்சத்தில் திளைக்கும் அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா! ஆனால் இந்த ராசிக்காரரின் நிலைமை ரொம்ப பாவம் தான்.....! மே 31, 2022 ராசிபலன்..Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 01:30-  02:30 வரை

Nalaya Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கைக்கு கடினமான உழைப்பு தான் அடித்தளம் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று மன நிலை அமைதியாக இருக்கும், இலக்கை கைப்பற்றக் கடினமான உழைப்பு தேவைப்படும். காதல் வாழ்க்கையில் சுமுகமான உறவு இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது. பயணம்  செய்வீர்கள். உடல்நலம் நன்றாக உள்ளது, பயணத்தால் உடலுக்கு ஓய்வு தேவைப்படும். சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7


மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!


ரிஷபம் (Taurus 2022 Horoscope)

அமைதியான மன நிலைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று எதிர்பார்க்காத புதிய மாற்றங்கள் பல  நிகழும் நாளாக இருக்கும், அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும், துணிச்சலான பல முடிவுகள் பல எடுக்க வேண்டியிருக்கும்.  குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும், பாராட்டு பெறுவர். மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான உடல்நிலையை அளிக்கும். துணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அன்பான மனதும் கடுமையான உழைப்பும் கொண்ட உங்களுக்கு இன்று அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும், மேலதிகாரியின் உதவி அதிகமாகக் கிடைக்கும். கணவன் மனைவி உறவில்  தேவையற்ற வாக்குவாதம் சிறிய பிரிதலை உருவாக்கினாலும், குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதிக்காது. நண்பர்களின் மூலம் மனம் நிம்மதி அடையும். செல்வ நிலையில் அதிகமான கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், திடீரென கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும். தொழில் வளர்ச்சி!   

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை 

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

மற்றவருக்கு உதவி செய்வதைப் பற்றி பெருமை பேசாத தன்னடக்கம் கொண்ட கடக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக இருக்கும், குடும்பத்தினரின் அக்கறையான பார்வை மனதில் நிம்மதியை விதைக்கும். தொழில் ஸ்தானத்தில் இயல்பான வளர்ச்சி இருந்தாலும், நீங்கள் உழைக்கும் வேகம் சற்று குறைவாகவே இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும், அதனால் புதிய ஞானம் பெறுவதற்கான சிந்தனை அதிகமாக இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது. நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 8


மேலும் படிக்க: தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரரான கடகத்தின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள்! 


சிம்மம் (Leo 2022 Horoscope)

திடமான மன நிலை கொண்ட உங்களுக்கு இன்று வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் அடைந்ததுபோல மனம் நிறைவாக இருக்கும், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் திறமையான தலைமை பணியிடத்தில் கடினமான வேலையைத் திறம்பட முடித்து பாராட்டு பெற உதவும். இன்று பணப்புழக்கம் அவ்வளவு நன்றாக இல்லை. மேலும் உங்கள் குடும்பத்தினர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பர். மனநிலை சிறப்பாக இருந்தாலும் உடல்நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன நிறைவு!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

பிறரின் உதவியை நாடாது தன்னம்பிக்கையுடன் போராடும் உங்களுக்கு இன்று எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் நண்பர்களின் உதவி மிகவும்  உதவியாக இருக்கும், நிதி வளர்ச்சியை மேம்படுத்தும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, உத்வேகத்துடன் உழைக்க நம்மைத் தூண்டும். உத்தியோகத்தில் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும், அனுபவம் வாய்ந்த பெரியோரின் ஆதரவு கிடைக்கும், தொழில் வளர்ச்சி கொள்ளும்.  ஆதரவு!  

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 7


ன்னி ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


துலாம் (Libra 2022 Horoscope)

நிதானமாக இருந்தால் தவறுகள் நடக்காமல் தெளிவாக முன்னேறலாம் என்பதை அறிந்த உங்களுக்கு இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் சக பணியாளரின் ஆதரவு அலுவலகத்தில் கிடைத்தாலும் இன்று மந்தமான நிலையே இருக்கும். வீட்டில் நல்ல புரிதல் இருக்கும். செல்வ நிலையில் அதீத கவனம் வேண்டும். பண இழப்பு நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியக் குறை இருக்கும், உணவு பழக்கத்தில்  குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

யதார்த்தமான நடத்தையால் பிறரைக் கவரும் உங்களுக்கு இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், செல்வ வரவு அதிகமாகும். நிதி நிலை உயரும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகமாகும். நண்பர்களின் மூலம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பு ஆகும். வீட்டில் இன்பமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொலைத்தூர பயணம் செய்ய ஆர்வம் தோன்றும்.  மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், கவனம் திசை மாறும். லாபம்!  

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius 2022 Horoscope)

மாற்றங்களைக் கண்டு கலங்காத தைரியமான குணத்தைக் கொண்ட உங்களுக்கு இன்று விடாமுயற்சி அதிகமாகத் தேவைப்படும், உங்கள் அயராது உழைப்பு பணியிடத்தில் மதிப்பைத் தரும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், பெற்றோரின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகமாகும். பூர்வீக சொத்துகளில் நிலவிய சிக்கல் தீரும். எதிர்பாராத பண வரவு இருந்தாலும், செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், உடல் சோர்வாக இருக்கும் நல்ல ஓய்வு தேவைப்படும். செலவு!     

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3


மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் நன்மையா இல்ல தீமையா! குழப்பமான நிலையில் இருக்கும் தனுசு ராசியின் நிலைமை.....!


மகரம் (Capricorn 2022 Horoscope)

ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டமில்லாத உங்களுக்கு இன்று மன ஆனந்தமாக இருக்கும், இன்பமான மன நிலை குடும்பத்தில் அன்பாக நடக்க உதவும். வீட்டில் அனைவரையும் சந்தோஷப்படுத்துவீர்கள்.  காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும், நல்ல வரவேற்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் இன்று நிலை சரியில்லை. நிதி நிலை நன்றாக உள்ளது. தன லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

தெளிவான சிந்தனையும் அயராது உழைப்பும் கொண்ட உங்களுக்கு இன்று அதிகமான பொறுமை தேவையாகும், தொழில் வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, திட்டமிட்டபடி பணியாற்றுவதில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் பொறுமையாக அனுசரித்து செலவது குடும்பத்தில் நிம்மதியை அதிகப்படுத்தும். பணப்புழக்கம் கையில் குறைவாக இருக்கும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதம் மூலம் பிரச்சனைகள் தோன்றும், இன்று காதலிப்பவரின் மனதைக் காயப்படுத்துவீர்கள். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது, உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  குழப்பம்!  

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

ஆசைகளை அடையக் கடினமாகவும் உழைக்கத் தயங்காத மீன ராசிக்காரரே இன்றை தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும், உங்களின் சுய வளர்ச்சி நன்றாக இருக்கும், உத்தியோகஸ்தருக்கு பணியில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், முடிவு நல்லதாகவே அமையும். இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும், உடன்பிறப்புகளின் மூலம் ஆனந்தம் அடைவீர்கள். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக உள்ளது. உடல்நலம் சிறப்பாக உள்ளது. ஆதாயம்!  

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்:6


மேலும் படிக்க: மீன  ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்