Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
0.00sensex(0.00%)
நிஃப்டி22,147.90
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - நிதானம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - அதிர்ஷ்டம்

கடகம் - செலவு

சிம்மம் - தடை

கன்னி - பொறுமை

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 01.45 - 02.45 வரை

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

அனுகூலப் பலன்களை அனுபவிக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். அனாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

வெற்றியை அடைய வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

இன்றைய நாள் அனுகூலபமான நாள். உங்க திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். அதிர்ஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். செலவுகள் அதிகரிக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

எந்த காரியங்களையும் முன்கூட்டியே திட்டமிடுவது வெற்றியை அள்ளிக் கொடுக்கும். பணியிடத்தில் தடைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். இல்லற வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம். இன்றைய தினம் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 18.9.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [18.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்