Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 4 ஆம் நாள்  திங்கட்கிழமை (19.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- குழப்பம்

ரிஷபம்- தனம்

மிதுனம்-  புகழ்

கடகம்- அமைதி

சிம்மம்- பக்தி

கன்னி- திடம்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் எந்த பக்கம் போகலாம் என்ற குழப்பத்திலே நாள் ஓடிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் நீண்ட யோசனை இருக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனை கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் உரையாட குறையும். காதல் வாழ்வில் இன்பம் கூடும், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை ஆனால் மனம் பதட்டமாக இருக்கும்.  குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று கையில் காசு விளையாடும். நிதி நிலையில் ஓரளவு நல்ல வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் வேலை சிறப்பாக நடக்கும். குறித்த இலக்கு சரியான நேரத்தில் முடியும். செலவை கவனம் செலுத்தி கொள்ளுங்கள். குடும்பத்தினர் உடன் இனிமையான உரையாடல் இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், குளுமையான உணவு உடல்நலத்தில் பிரச்சனை அளிக்கும். தனம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் பழைய செயலுக்கு பாராட்டு கிடைக்கும். தொழில் லாபத்தை நோக்கி நகரும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை, இன்றைய செலவை ஓரளவு சமாளிக்கும். காதல் வாழ்வில்  நேர்மையான நடத்தையால் உங்களுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். உடல்நலத்தில் கால் வலி ஏற்படும், மருத்து செலவு வரும். புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அருமையாக இருக்கும், எடுக்கும் காரியத்தில் கிடைக்கும் வெற்றி மனதில் நிம்மதி அளிக்கும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். குடும்ப வாழ்வில் அக்கறை அதிகமாகும். குழந்தைகள் உடன் நல்ல உறவு உண்டாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று மனம் அமைதியை மட்டுமே அதிகம் எதிர்பார்க்கும், தொழில் சுமுகமாக நடக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வீட்டில் அனைவருடனும் சகஜமாக பேசுவீர். காதல் வாழ்வில் இனிமை கூடும். செலவு அதிகமாகும், ஆடம்பர செலவைக் குறைத்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கால் வலி, சோர்வு ஏற்படும். பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : கவலைகள் எல்லாம் இன்று சந்தோஷமா மாறும்.... 19.12.2022 ராசிபலன்....!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சிக்கலை தைரியமாகக் கையாளுவீர். அலுவலக வேலையில் கொஞ்சும் ஓய்வு கிடைக்கும். செல்வ வரவு உண்டு, ஓரளவு சேமிப்பு உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறிய மனக்கசப்பு உண்டாகும். ஆனால் வெளிப்படையான பேச்சு நட்பான உறவை ஏற்படுத்தும். நண்பர்களுடன் இனிமையான பேச்சாற்றல் இருக்கும். நரம்பு சார்ந்த தொல்லை உண்டாகும். திடம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (19.12.2022, திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்