Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image.

கடந்த 3-4 ஆண்டுகளாக கொரோனா என்னும் வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. சீனாவில் தொடங்கிய இந்த உயிர்க்கொல்லி நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவி உலகில் எத்தனையோ உயிர்கள் மண்ணிற்கு இறையாகினர். அதுமட்டுமல்லாம், ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியும் ஒருபுறம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு எல்லாம் ஓரளவுக்கு குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஒமைக்ரான் என்ற மற்றொரு தொற்று பீதியை கிளப்ப தொடங்கியது. ஆனால், இதன் தாக்கம் மக்களிடையே அவ்வளவாக இல்லை. இதனால் நிம்மதி பெருமூச்சுவிடும் சமயத்தில் டிசைன் டிசைனாக தொற்றுநோய்கள் பரவத் தொடங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகையே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். சரி வாங்க, 2022 ஐ கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image

குரங்கு அம்மை:

சின்னம்மை, பெரியம்மை போன்று இதுவும் ஒரு அம்மை (Monkeypox) நோயாகும். குரங்கு அம்மை வைரசால் ஏற்படும், இந்நோயானது தீவிரத்தன்மை இல்லாதது. து Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxviral என்னும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. முதன் முதலில் இந்த வைரஸ் 1958 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்குகளிடம் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மனிதரிகளிடன் இந்த பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதன் பிறகு, 2022ல் தான் பிரிட்டனில் முதல்முறையாக இந்த குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. 

அறிகுறிகள்..

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image

ஆந்த்ராக்ஸ் வைரஸ்:

1850 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பாசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் என்ற பாக்டீரியாவால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக் கூடிய நோய்தான் ஆந்த்ராக்ஸ் (What is Anthrax Disease in Tamil). பொதுவாக இது விலங்குகள் மற்றும் தாவரங்களை உண்ணக்கூடிய பாலூட்டிகளுக்கு மட்டுமே ஏற்படும். பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் பொதுவாகவே மண்ணில் தான் காணப்படுகிறது. இந்த பூஞ்சைக் கூடுகள் இருக்கும் நீரை விலங்குகள் பருகும் போது எளிதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல், இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை உண்ணுவதால் மற்ற விலங்குகளுக்கு பரவுகிறது. இந்த நோயின் பரவுலும் உலகில் பல்வேறு இடங்களில் பீதியை கிளப்பியது.

அறிகுறிகள்..

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image

மெட்ராஸ் ஐ:

இமையையும் விழியையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே 'மெட்ராஸ் ஐ' (விழி வெண்படல அழற்சி) என்று அழைக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் இந்நோயானது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் கோவப்பழம் போன்று சிவந்திருக்கும். அதனால் அவர்களை பார்ப்பதாலே நமக்கும் வந்துவிடும் என்று பயந்து ஓடுவோம். இந்தியாவில் இந்த வருடம் இந்த தொற்றுநோயின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

அறிகுறிகள்..

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image

பன்றிக் காய்ச்சல்

பருவ நிலைக்கு ஏற்ப டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல், எலி காய்ச்சல் என்று புதிது புதிதாக தோன்றும். அப்படி பருவநிலை காலங்களில் கடந்த ஆண்டு பீதியை கிளப்பிய காய்ச்சலில் ஒன்று தான் ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் பன்றி காய்ச்சல். இந்த காய்ச்சல் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது. 'ஸ்வைன் இன்ஃப்ளூயென்சா' என்ற வைரஸால் ஏற்படும் இந்த நோயானது, நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் போன்ற சில தீவிர நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

அறிகுறிகள்..

Health Rewind 2022 | 2022ல் பீதியை கிளப்பிய வைரஸ் தொற்று நோய்கள்.. Representative Image

தக்காளி காய்ச்சல்:

இதெல்லாம் போதாது என்று தக்காளி காய்ச்சல் என்ற தொற்றுநோய் கேரளாவில் தலைதூக்கியது. குழந்தைகளை குறிவைத்து தாக்கும் இந்த "தக்காளி காய்ச்சல்" மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். காக்சாக்கி ஏ 16 (COXSACKIE A 16 VIRUS) எனும் வைரஸால் உருவாகும் இந்த அரிய வகை நோய், உடல் முழுவதும் சொறி, மற்றும் கொப்புளங்களை உண்டாக்கக்கூடியது. 

அறிகுறிகள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்