Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…

Gowthami Subramani November 04, 2022 & 14:50 [IST]
பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image.

பால் என்றாலே பாக்கெட் பால் என்ற நிலைமை தற்போது வந்து விட்டது. நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரையிலும் பாக்கெட் பால் விற்பனை தொடங்கி, எளிதாக தேவைப்படும் நேரத்தில் கடைகளில் சென்று வாங்கி விடலாம் எனக் கூறப்படுகிறது. நமது வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பாலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

இவ்வாறு நாம் கடைக்குச் சென்று பால் வாங்கும் போது, பல்வேறு நிறங்களால் ஆன பாக்கெட்டுகளைப் பார்த்திருப்போம். ஆனால், அந்த கலர் பாக்கெட்டுகளில் என்ன வித்தியாசம் உள்ளது என்பது சில பேருக்குத் தெரியாது. எந்த கலர் என்றால் என்ன? என நினைத்து எதாவதொரு பால் பாக்கெட்டை வாங்கிச் செல்வோம். ஆனால், அந்த பாக்கெட்டுகளின் நிறத்தில் தான் வித்தியாசமே உள்ளது. அவற்றைப் பற்றி இதில் காண்போம். பால் பாக்கெட்டுகளின் வண்ணம் என்பது பொதுவாக கொழுப்புச் சத்தைக் குறிக்கிறது. பாலில் உள்ள கொழுப்பைப் பொறுத்து, ஒவ்வொரு வண்ண பால் பாக்கெட்டுகளும் மாறும்.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

அதன் படி, பால்பாக்கெட்டுகளின் நிறங்கள், அவற்றில் உள்ள கொழுப்புகளின் அளவில் மாற்றத்தை உண்டாக்குகின்றன. அதன் படி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பவே பால் பாக்கெட்டுகள் வாங்கப்படுகின்றன. இதற்காகவே, இந்த வண்ண மாற்றங்களுடன் கூடிய பாக்கெட்டுகள் வாங்கப்படுகின்றன. இதனால், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் அவரவர்களுக்கு ஏற்ற பால் பாக்கெட்டை வாங்கலாம். இதில், எந்தெந்த கலர் பாக்கெட் பால், யார் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காண்போம்.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

நீல நிறம் பாக்கெட் பால்

நீல நிற பாலானது, நைஸ் பால் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது அனைவருக்கும் ஏற்றதாகும். அதாவது சமன்செய்யப்பட்ட பால் ஆகும். இதில், நடுநிலை அளவில் கொழுப்பு உள்ளது. இதனால், இது எளிதில் ஜீரணம் அடைய வைக்கும். இதன் காரணமாக, வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், என அனைவரும் இந்தப் பாலை எடுத்துக் கொள்ளலாம். இந்த நீல நிறத்திலான பாக்கெட்டில் 100 கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

பச்சை நிற பாக்கெட் பால்

இந்த வகை பாலில் கொழுப்பு சற்று அதிகமாக இருக்கும். எனவே, இதனை நோயாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இதனை எடுத்துக் கொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த பச்சை நிற பாக்கெட்டில் 100 கிராம் பாலில் 4.5 கிராம் கொழுப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

ஆரஞ்சு நிற பாக்கெட் பால்

ஆரஞ்சு நிற பாக்கெட் பாலானது, அதிக கொழுப்புச் சத்து கொண்ட பாலாக உள்ளது. இதனை, வயதானவர்கள், நோயாளிகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிக நல்லது. குறிப்பாக நோயாளிகள் இந்த நிற பாக்கெட் பால் எடுத்துக் கொள்வதை அரவே தவிர்ப்பது நல்லது. இந்த வகை பாலானது, இனிப்பு பண்டங்கள் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வகை பாலானது ஃபுல் க்ரீம் பால் (Full Cream Milk) எனக் கூறப்படுகிறது. இதில் கொழுப்பு அதிக அளவு உள்ளது. இந்த நிற பால் பாக்கெட்டில், 100 கிராம் பாலில் 6 கிராம் கொழுப்பு உள்ளது.

பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம் – எந்த கலர் பாக்கெட் பால் பெஸ்ட் தெரியுமா..? அதுக்கு இது தான் காரணம்…Representative Image

பிங்க் நிற பாக்கெட் பால்

இதில், கொழுப்பு மிகக் குறைவாக உள்ளது. எனவே, இந்த வகை பால் டயட் பால் எனக் கூறப்படுகிறது. இந்த வகை பாலானது ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தவையாக இருக்கும். பொதுவாக டயட் இருப்பவர்கள், வயதானவர்கள் போன்றோர் இந்த பிங்க் நிற பாக்கெட் பாலை எடுத்துக் கொள்வது சிறந்தது. குறிப்பாக, இந்த நிற பாக்கெட் பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைவாக அதாவது 100 கிராம் பாலில் 1.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளதால், இதனை எடுத்துக் கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்