Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்டி செஞ்சி பாருங்க.. மஞ்சள் நிறத்தில் இருக்கும் மிக்ஸி பளீச்சென்று மாறிடும்...

Nandhinipriya Ganeshan October 14, 2022 & 19:00 [IST]
இப்டி செஞ்சி பாருங்க.. மஞ்சள் நிறத்தில் இருக்கும் மிக்ஸி பளீச்சென்று மாறிடும்...Representative Image.

சமையலறையில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்று தான் மிக்ஸி. ஒரு நாளைக்கு முறையாவது இதை பயன்படுத்திவிடும். உண்மையை சொல்லப்போனால், இது இல்லாமல் பல தாய்மார்களுக்கு வேலையே ஓடாது. அந்த அளவிற்கு மிக்ஸி அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இப்படி தினமும் உபயோகிப்பதால் வெகு சீக்கிரத்திலேயே பழுதாவிடும். அதுவும் வெள்ளை நிற மிக்ஸியாக இருந்தால் சுத்தம் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். நாம் என்ன தான் தேய்த்து கழுவினாலும் அந்த மஞ்சள் நிறம் மட்டும் போகவே போகாது. அதற்காக, அடிக்கடி மாற்றிவிட முடியுமா? 

இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் பழைய மிக்ஸியும் புதிதுபோல மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், அடிக்கடி உபயோகிப்பதால் மிக்ஸி ஜாரின் அடிப்பகுதியிலும் அழுக்கு அண்டிவிடும். அதையும் எளிதில் சுத்தம் செய்துவிடலாம். எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

உங்களிடம் உள்ள ஆரி துணிகளை இப்படி பராமரியுங்கள்! நீண்ட நாட்களுக்கு புதுசு போலவே இருக்கும்!

இப்டி செஞ்சி பாருங்க.. மஞ்சள் நிறத்தில் இருக்கும் மிக்ஸி பளீச்சென்று மாறிடும்...Representative Image

மிக்ஸியை சுத்தம் செய்வது எப்படி?

டிப்ஸ்: 1

ஒரு கிண்ணத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் ஏதாவது ஒரு ஃபேஸ் வாஷை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், ஒரு பழைய டூத் பிரஷையும் எடுத்துகொள்ளுங்கள். மிக்ஸி மீது தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த ஃபேஸ் வாஷை பிரஷில் தொட்டு மிக்ஸியின் அனைத்து பகுதிகளையும் நன்றாக தேய்த்துவிட்டு ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்துவிடுங்கள். இதோபோல், மிக்ஸியின் ஒயர்யும் ஃபேஸ் வாஷை தொட்டு தேய்த்து துடைத்துவிடுங்கள்.  

வீட்டில் தங்க, வைர ஆபரணங்களை சுத்தம் செய்வது எப்படி?

டிப்ஸ்: 2

ஒரு டூத் பிரஷில் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு டூத் பேஸ்ட்டை தொட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக தேய்த்து எடுக்கலாம். பின்னர், தண்ணீரில் துணியை நனைத்து கொண்டு நன்றாக துடைத்து எடுத்துவிடுங்கள். அவ்வளவு தான் எவ்வளவு மஞ்சளாக இருந்தாலும் பளபளன்னு மாறிவிடும்.

லேப்டாப், கீபோர்டை  பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?

இப்டி செஞ்சி பாருங்க.. மஞ்சள் நிறத்தில் இருக்கும் மிக்ஸி பளீச்சென்று மாறிடும்...Representative Image

மிக்ஸி ஜாரை சுத்தம் செய்வது எப்படி?

டிப்ஸ்: 1

ஒரு காய்ந்த முட்டை ஓடு, சிறிதளவு பேக்கிங் சோடா, வினிகர் 1 டீஸ்பூன் மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு 4 ஓட்டு ஓட்டிவிடுங்கள். ஜாரில் இருக்கும் அழுக்கும் மூடியில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக போய்விடும். இந்த கலவையை ஜாரின் பின்புறம் ஊற்றி பிரஷில் தேய்த்து எடுத்துவிட்டு தண்ணீரில் கழுவினால் பளீச்சென்று மாறிவிடும்.

இனி வீட்டிலேயே பட்டுப் புடவையை அலசலாம்...

டிப்ஸ்: 2

2 ஸ்பூன் அரிசி, 1 ஸ்பூன் பேக்கிங் சோடா இரண்டை ஜாரில் போட்டு 4-5 ஓட்டு ஓட்டிவிடுங்கள். இப்படியும் ஜாரை சுத்தம் செய்யலாம். இந்த பவுடரை ஜாரின் பின்புறத்தில் போட்டு பிரஷால் தேய்த்து கழுவிடுங்க. ஜார் சுத்தமாகிவிடும். 

மாடித்தோட்டம் வைத்திருக்கிறீர்களா..! அப்போ இப்படி பண்ணுங்க….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்