இந்த அவசர காலத்தில் அதிக பெண்கள் தங்களின் உடல் மற்றும் உணவு பழக்கத்தில் சரியாக இல்லை. இதனின் விளைவு இளம் வயதிலையே சரும பிரச்சனை, முகத்தில் சுருக்கம், உடல் பலகீனம் போன்ற கோளாறுகள். தங்களின் உடல் நலனைக் கவனிக்க தவறும் இவர்களின் தவறான வாழ்க்கை மற்றும் உணவு முறையை சீக்கிரம் சரி செய்யலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும், எந்த மாறியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பாப்போம்.
அதாவது முந்திரி, பாதம், பிஸ்தா உள்ளிட்ட பருப்பு வகைகளைப் பற்றி தான் கூறுகிறோம். உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளில் ஒமேகா 3 மற்றும் வைட்டமின் E இரண்டும் அதிகமாக உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மற்றும் சேதங்களை அடியோடு குறைக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் கொழுப்பு அமிலம் சருமத்தை இருக்கமாக்க உதவும். மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி முகத்தை ஜொலிக்க வைக்கும்.
சருமம் பிரகாசமாக இருக்க உங்களின் உடம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். இந்த பசலைக்கீரையில் பீட்டா கரோட்டின், மெக்னீசியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருக்கிறது. எனவே, இந்த கேரையை அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்கள் உடம்பு நீர்ச்சத்துடன் இருக்கும். எனவே, சருமம் சுருக்கம் இல்லாமல் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.
வரும் முன் காப்போம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இது. தினமும் ப்ளூபெரி சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்பட உள்ள சேதாரம் குறையும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் C மற்றும் A அதிகம் உள்ளது.
முதுமை தோற்றதை குறைக்க மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் ப்ரோகோலியில் இருக்கிறது. ஏனெனில் அதில் கால்சியம், வைட்டமின் C, K, நார்சத்து, லுடீன், ஃபோலேட் போன்றவை உள்ளது. எனவே, அதிகம் இதை எடுத்துக்கொண்டால் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவது குறையும்.
ஃபிளாவோனால்கள் மற்றும் வயது முதிர்ச்சியை குறைப்பதற்கு தேவையான வைட்டமின்கள் இதில் உள்ளது. அதனால் சருமத்திற்கு மிகவும் நல்லது, மேலும் சருமம் ஜொலிக்க உதவும்.
சரும ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் A, K, C மற்றும் E, போல பல அத்யாவசிய பண்புகள் அதிகம் உள்ளது. மேலும் பப்பாளி பழத்தின் தோலை முகத்தில் தேய்த்து கழுவினால் பளபளப்பாக இருக்கும். மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பப்பாளி ஜூஸ் குடித்தால் முகத்தில் ஏற்படும் கோடுகள், சருமம் கருப்பு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…