Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. 

Nandhinipriya Ganeshan October 24, 2022 & 12:00 [IST]
ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image.

அனைவருக்கும் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதும் சிப்ஸ், முறுக்கு, வடை, மிக்ஸர் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், அந்த உணவுப் பொருட்களை எந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுகிறோமோ அதைவிட இருமடங்கு உடலில் பிரச்சனைகளை தான் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், உடல் எடை அதிகரித்துக்கும். அப்போ என்னதான் சாப்பிட சொல்றீங்க? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 

ஆபத்தை தரும் அந்த மாதிரியான ஸ்நாக்ஸை தவிர்த்துவிட்டு ஆரோக்கியத்தை தரும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை சாப்பிடலாமே. இவை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் என்ற இருவருக்குமே ஏற்றது. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை ட்ரை என தினந்தோறும் ஃபுரூட்ஸ் & நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வருவதால், பல நோய்களில் இருந்து தப்பித்து ஆயுளை நீட்டிக்கலாம். இவற்றை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது இடைவேளை நேரங்களில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

அத்திப்பழம்:

அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். மேலும், இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். 

 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

பேரீச்சை:

இரும்புச்சத்து அதிகமுள்ள பேரீச்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலம் பெறும். நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம். இரத்தசோகையை போக்கக்கூடியது. சைவ பிரியர்கள் பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அசைவ உணவுகளில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் பெறலாம். இது உடலுக்கு வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. 

 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

உலர் திராட்சை:

உலர் திராட்சைக்கு மனஅழுத்தை குறையும் திறன் உண்டு. இதில் மூன்று விதமான உலர் திராட்சைகள் உள்ளன. அவற்றில் கருப்பு உலர் திராட்சை கூடுதல் நன்மைகளை தரக்கூடியது. ஜூரணக் கோளாறுகள் இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். காய்ச்சல் சமயத்தில் இதை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 5-6 உலர் திராட்சை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஜூஸ் செய்தும் கொடுக்கலாம்.

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

வால்நட்:

வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும். அதுமட்டுமல்லாமல், இதில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. மற்ற உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை காட்டிலும் வால்நட்டின் சுவை கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால், ஏராளமான நன்மைகளை அள்ளி கொடுக்கக்கூடியது. ஒருவர் நாள் ஒன்றுக்கு அரை வால்நட் சாப்பிடலாம். 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

பாதாம் பருப்பு:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒருவர் நாள் ஒன்றுக்கு 4-5 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம். எப்போதும் பாதாமை 1/2 மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. அல்லது எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். ஏனென்றால் பச்சையாக சப்பிடும் போது அதன் மேல்தோல் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். இவற்றை சாப்பிடுவதால் சருமம் பொலி பெறும். குறிப்பாக, ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்சனை இருப்பவர்கள் கூறிய அளவில் இருந்து சற்றே குறைத்துக் கொள்ளலாம். 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

முந்திரி பருப்பு:

நார்சத்து அதிகம் உள்ள முந்திரி பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும். விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பு கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் தினமும் 2 முந்திரி என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் முந்திரியை அடிக்கடி சாப்பிடக்கூடாது. வாரத்திற்கு 2-4 என்ற அளவில் சாப்பிடலாம். 

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

பிஸ்தா பருப்பு:

உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் பிஸ்தா பருப்பை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 65 வயதுக்கு மேற்பட்டோர் பிஸ்தாவை தவிர்ப்பது நல்லது. பிஸ்தாவில் இருக்கும் பாஸ்பரஸ் சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது. சருமத்தை மினுமினுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இந்த பருப்பு உடல் எடை அதிகரிக்கும் நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு. அதுவும் 3-4 அளவில் எடுத்துக் கொண்டால் போதும்.

ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்.. ஆரோக்கியம் தரும் நொறுக்கு தீனிகள்.. யார் சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்.. Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்