Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் பால் கேக்.. ஈசியான முறையில்.. 

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 16:30 [IST]
வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் பால் கேக்.. ஈசியான முறையில்.. Representative Image.

How to Make Milk Cake at Home: நெய் மில்க் கேக், பால்கோவா மாதிரிதான் செய்யப்படும், ஆனால் பால்கோவாயை விட வித்தியாசமான சுவையை கொண்டிருக்கும். ஈஸியாக செய்துவிடலாம். ஆனால் குறைந்தது மூன்று மணிநேரம் செலவிட வேண்டும்.

தேவையான பொருட்கள்:

பன்னீர்:

முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்

எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்

மில்க் கேக்:

நெய் - 3 டீஸ்பூன்

சர்க்கரை - 3/4 கப்

பால் - 2 லிட்டர்

பாதாம் - 5

பிஸ்தா - 5

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்; தேதி, நல்ல நேரம், விளக்கேற்றும் முறை, திசை, எண்ணிக்கை...

வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் பால் கேக்.. ஈசியான முறையில்.. Representative Image

செய்முறை:

முதலில் பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்கவிடவும். 

சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

பால் நன்றாக கொதித்து வரும் சமயத்தில் 3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, மறுபடியும் நன்றாக கிளற விடவும். இப்பொது பால் திரிந்து வரும், அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் போட்டு வடிகட்டி, சுத்தமான தண்ணீர் ஊற்றி பன்னீரை ஒருமுறை கழுவிக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர், ஒரு தட்டில் வைத்து நன்றாக உடைத்து விடவும், அவ்வளவு தான் நெய் பால் கேக் செய்ய தேவையான பன்னீர் ரெடியாகிடிச்சு. இப்போது மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றி, மிதமான சூட்டில் கிட்டத்தட்ட 11/2 மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

வெறும் 30 நிமிடத்தில் தித்திப்பான சுவையில் மிருதுவான ரசகுல்லா..

வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் பால் கேக்.. ஈசியான முறையில்.. Representative Image

இப்போது பால் திரட்டுப்பால் போல் திரண்டு வரும், அந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கலக்கவும். பின்னர், அதில் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இப்போது பால் நன்றாக இளகி வரும், அதில் 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.

அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்டான பர்ஃபியை நாலு விதமாக எப்படி செய்வது?

அதை மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவி இந்தப் பால் திரட்டை அதில் கொட்டி லேசாக அழுத்தி கொடுக்கவும், அதாவது சமப்படுத்தி வைக்க வேண்டும். அதன்மீது பொடித்து வைத்திருந்த பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பை சேர்த்து மீண்டும் ஒரு முறை அழுத்தி விடவும்.

இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு, வேண்டிய வடிவத்தில் துண்டுகளாக போட்டு பரிமாறவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம். இப்போது வாயில் வைத்ததும் கரையும் சுவையான நெய் பால் கேக் ரெடி... ட்ரை பண்ணி பாருங்க...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்