Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 09:45 [IST]
புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...Representative Image.

தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளிக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றைய நாள் நேரமாக எழுந்து எண்ணெய் வைத்து நீராடி, புதுத்துணி அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடுவோம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தீபாவளி அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இருப்பினும், இந்த வருடம் (அக்டோபர் 24, 2022) மகிழ்ச்சிக்கும் கொண்டாடத்திற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, நம்ம கதைக்கு வருவோம். தீபாவளி வந்துவீட்டாலே அனைவரது வீட்டிலும் அம்மாக்கள் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பலகாரங்கள் செய்வார்கள். அந்தவகையில், மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்டான பர்ஃபியை நாலு விதமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

சுவையான, இனிப்பு பால் பொங்கல் - அக்கரவடிசல்

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...Representative Image

ரவை பர்ஃபி (Rava Burfi Recipe in Tamil)

தேவையான பொருட்கள்:

▢ ரவை - 50 கிராம்

▢ சர்க்கரை - 200 கிராம்

▢ பால் - 400 மிலி

▢ நெய் - 50 கிராம்

▢ ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பிறகு, ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதத்திற்கு வந்தவுடன் கிளறி இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பிவிடவும்.

ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இப்போது சுவையான ரவை பர்ஃபி ரெடி.

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...Representative Image

தேங்காய் பர்ஃபி (Coconut Burfi in Tamil)

தேவையான பொருட்கள்:

▢ துருவிய தேங்காய் - 1 கப்

▢ நெய் - 4 டீஸ்பூன்

▢ ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

▢ நறுக்கிய முந்திரி - 1 டீஸ்பூன்

▢ தண்ணீர் - 1/4 கப்

▢ சர்க்கரை - 3/4 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக்கொள்ளவும். 

பின்னர், மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து ஓரளவு கெட்டியாக வரும்போது அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும்.

அப்படி கிளறும்போது நுரைக்க ஆரம்பிக்கும் அப்போது முந்திரி, ஏலக்காய்பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கலவையை ஒரு பெரிய தட்டில் நெய் தடவி அதில் மாற்றி சமமாக ஒரு கரண்டியை வைத்து பரப்பி விடுங்கள்.

சூடாக இருக்கும்போதே அதை சதுர வடிவில் கத்தியால் துண்டுப்போட்டு விடுங்கள். இதை அப்படியே வைத்து நன்றாக ஆறியதும் வெட்டி எடுத்தால் சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி! 

அடை பிரதமன் இப்படி செஞ்சி பாருங்க...!!

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...Representative Image

7 கப் பர்ஃபி (7 Cups Burfi Recipe in Tamil)

தேவையான பொருட்கள்:

▢ நெய் - 1 கப்

▢ முந்திரி பவுடர் - 1 கப்

▢ துருவிய தேங்காய் - 1 கப்

▢ சர்க்கரை - 2 கப்

▢ பால் - 1 கப்

▢ ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

▢ கடலை மாவு - 1 கப்

செய்முறை:

கடலை மாவு, இன்ஸ்டண்டாக கடையில் வாங்கிக்கொண்டாலும் சரி, இல்லை நீங்களே பொட்டுக்கடலையை அப்போது அரைத்துக்கொண்டாலும் சரி 1 கப் எடுத்து நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 கப் நெய் ஊற்றி சூடானதும், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, குறைந்த தீயில் 20 நிமிடம் நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். 

பச்சை வாசனை போய், நிறம் மாறி, நல்ல வாசனை வர ஆரம்பிக்கும் அந்த சமயத்தில், 1 கப் முந்திரி பொடி, 1 கப் தேங்காய், 2 கப் சர்க்கரை மற்றும் 1 கப் பால் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

இதை ஒரு 30 நிமிடத்திற்கு மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிடுங்கள். அடிப்பிடிக்காதவாறு கிளறி கொண்டே இருக்க வேண்டும். இப்போது ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அந்த கலவையை ஊற்றி பரப்பிவிட்டு 20 நிமிடம் கழித்து துண்டுகளாக வெட்டி எடுத்தால், 7 கப் பர்ஃபி ரெடி!

நாவில் எச்சில் ஊற வைக்கும் மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா…

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...Representative Image

கடலைமாவு பர்ஃபி (Besan Burfi Recipe in Tamil)

தேவையான பொருட்கள்:

▢ கடலை மாவு - 1 கப்

▢ நெய் - 1/4 கப்

▢ ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

▢ பாதாம் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

▢ சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்

▢ தண்ணீர் - 1/3 கப் 

செய்முறை:

கடலை மாவு, இன்ஸ்டண்டாக கடையில் வாங்கிக்கொண்டாலும் சரி, இல்லை நீங்களே பொட்டுக்கடலையை அப்போது அரைத்துக்கொண்டாலும் சரி 1 கப் எடுத்து நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, குறைந்த தீயில் 20 நிமிடம் நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போய், நிறம் மாறி, நல்ல வாசனை வர ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்துவிட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர், மற்றொரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை காய்ச்சிக்கொள்ளுங்கள். இப்போது அதில் ஏலக்காய் பொடியை போட்டு சரியான சர்க்கரை பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பை கம்மியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இதன்பிறகு, நாம் வறுத்த வைத்த கடலை மாவை எடுத்துக்கொட்டி கட்டியில்லாமல் நன்றாக கிளறி, இந்த கலவையை ஒரு பெரிய தட்டில் நெய் தடவி அதில் மாற்றி சமமாக ஒரு கரண்டியை வைத்து பரப்பி விடுங்கள்.

சூடாக இருக்கும்போதே பாதாம் பருப்பை தூவிவிட்டு அதை சதுர வடிவில் கத்தியால் துண்டுப்போட்டு விடுங்கள். இதை அப்படியே வைத்து நன்றாக ஆறியதும் வெட்டி எடுத்தால் சுவையான கடலை மாவு பர்ஃபி ரெடி! 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான புது ஸ்வீட் ரெசிபி...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்