Tue ,Jul 16, 2024

சென்செக்ஸ் 80,664.86
0.00sensex(0.00%)
நிஃப்டி24,586.70
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 20 - ஜூன் 25]....

Nandhinipriya Ganeshan June 26, 2022 & 12:00 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 20 - ஜூன் 25]....Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 31 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 28 நிறுவனங்கள் மொத்தம் சுமார் $980 மில்லியன் பெற்றுள்ளன. ஸ்டாஷ்ஃபின் மற்றும் லீட்ஸ்குவோர்டு ஆகியவை முறையே 270 மில்லியன் டாலர்களையும் மற்றும் 153 மில்லியன் டாலர்களையும் திரட்டியுள்ளன. கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 38 உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 906.44 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:


 

❖ நியோபேங்கிங் பிளாட்ஃபார்ம் ஸ்டாஷ்ஃபின், அன்கோரிலேட்டட் வென்ச்சர்ஸ், ஃபசனாரா கேபிடல், அப்ஸ்ட்ராக்ட் வென்ச்சர்ஸ், அல்டாரா வென்ச்சர்ஸ், க்ராவிஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் ஸ்னோ லெப்பர்ட் ஆகியவற்றிலிருந்து 270 மில்லியன் டாலர்களை திரட்டியது. 

❖ பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமான LeadSquared, வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து சீரிஸ் C நிதி சுற்றில் $153 மில்லியன் திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 103 வது யூனிகார்னாக உருவெடுத்துள்ளது.

❖ மறு-வணிக ஸ்டார்ட்அப்பான கேஷிஃபை (Cashify), நியூக்வெஸ்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் மற்றும் ப்ரோசஸ் தலைமையிலான சீரிஸ் E நிதிச்சுற்றில் 90 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், இந்த சுற்றில் தற்போதுள்ள முதலீட்டாளர்களான பெஸ்ஸெமர், ப்ளூம் வென்ச்சர்ஸ், ஒலிம்பஸ் கேபிடல் மற்றும் பராமார்க் வென்ச்சர்ஸ் ஆகியோரும் பங்கேற்றன.

❖ எட்டெக் ஸ்டார்ட்அப் லீப் ஸ்காலர், அவுல் வென்ச்சர்ஸ், ஸ்டெட்வியூ கேபிடல், பராமார்க் வென்ச்சர்ஸ், ஜங்கிள் வென்ச்சர்ஸ் மற்றும் செக்வோயா கேபிடல் இந்தியா ஆகியவற்றிலிருந்து 75 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொடர் D ரவுண்டை திரட்டியது.


 

❖ புது டெல்லியை சேர்ந்த சாய் கஃபே ஸ்டார்ட்அப் சாயோஸ், அதன் தற்போதைய முதலீட்டாளர்களான எலிவேஷன் கேபிட்டல், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், மற்றும் வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவற்றின் பங்கேற்புடன், ஆல்ஃபா வேவ் வென்ச்சர்ஸ் தலைமையிலான சீரிஸ் சி சுற்றில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இன்று) திரட்டியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க் ஸ்டார்ட்அப் Statiq, ஷெல் வென்ச்சர்ஸ் தலைமையிலான அதன் தொடர் A சுற்றில் 25.7 மில்லியன் டாலர்களை திரட்டியது.

❖ Fintech ஸ்டார்ட்அப் FinBox, A91 பார்ட்னர்ஸ், ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ், ஃப்ளிப்கார்ட் வென்ச்சர்ஸ் மற்றும் அராலி வென்ச்சர்ஸ் ஆகியவற்றிலிருந்து சீரிஸ் A நிதிச் சுற்றில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளது.

❖ புவனேஷ்வரை சேர்ந்த மைக்ரோ ஃபைனான்ஸ் லெண்டர் அன்னபூர்ணா ஃபைனான்ஸ், நேற்று (ஜீன் 24,2022) பிரெஞ்ச் டெவலப்மென்ட் ஏஜென்சியின் (AFD) தனியார் துறை நிதியுதவிப் பிரிவான Proparco-விடமிருந்து சீரிஸ் A2 நிதிச் சுற்றில் 15 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): இதற்கிடையில், மொத்த நிதியுதவி பெற்ற தொடக்க நிறுவனங்களில் நியூட்ரிக்ளோ, பிளம் மற்றும் ஜிவா ஜூவல்லரி என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தங்களது நிதி விவரங்களை வெளியிடவில்லை. 

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் 31 நிறுவனங்களின் நிதி திரட்டல்களை தவிர, நான்கு கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. அந்த வகையில், WinZo என்ற நிறுவனம் கேம் டெவலப்மெண்ட் ஸ்டுடியோ Upskillz கேம்ஸ் -வையும், FIXCRAFT நிறுவனம் VMotive -வையும், இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக தளமான Zomato உடனடி மளிகை ஸ்டார்ட்அப் Blinkit ஐ ₹4,447 கோடிக்கும், Pine Labs ஃபின்டெக் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் வழங்குநரான சேட்டுவை $70-75 மில்லியனுக்கும் வாங்கியிருக்கின்றன. 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்