Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் [ஜூன் 27 - ஜூலை 02] இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம்...

Nandhinipriya Ganeshan July 03, 2022 & 09:15 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் [ஜூன் 27 - ஜூலை 02] இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம்...Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 19 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 16 நிறுவனங்கள் மொத்தம் சுமார் $275.38 மில்லியன் பெற்றுள்ளன. ஆர்ஸூ மற்றும் ப்ராப்ஷேர் ஆகியவை முறையே 70 மில்லியன் டாலர்களையும் மற்றும் 47 மில்லியன் டாலர்களையும் பெற்று நிதியுதவி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. சென்ற வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் பெற்ற நிதியுதவி தொகை பாதியாக சரிந்துள்ளது. கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 31 உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார்  980 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:


 

❖ பெங்களூரை சேர்ந்த பி2பி ரீடெய்ல் டெக்னாலஜி தளமான ஆர்ஸூ (Arzooo), ஜப்பானை சேர்ந்த எஸ்பிஐ இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ட்ரிஃபெக்டா லீடர்ஸ் ஃபண்டிலிருந்து $70 மில்லியனை திரட்டியது.

❖ ப்ராப்டெக் ஸ்டார்ட்அப் ப்ராப்ஷேர் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் தலைமையில் $47 மில்லியன்களை பெற்றுள்ளது. தற்போதுள்ள முதலீட்டாளரான பிரவேகா வென்ச்சர்சும் இந்த சுற்றில் பங்கேற்றது.

❖ பி2பி டிஜிட்டல் மார்க்கெட் தளமான Solv, SBI ஹோல்டிங்ஸ் மற்றும் SC வென்ச்சர்ஸ் ஆகியவற்றிலிருந்து $40 மில்லியனை பெற்றுள்ளது.

❖ ஃபின்டெக் ஸ்டார்ட்அப் ப்ரோக்கேப், கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டைகர் குளோபல், செக்வோயா கேபிடல் இந்தியா மற்றும் கூகுள் ஆகியவற்றிலிருந்து $40 மில்லியன் திரட்டியது.

❖ ஃபின்டெக் ஸ்டார்ட்அப் GetVantage வரானியம் நெக்ஸ்ஜென் ஃபின்டெக் ஃபண்ட், டிஎம்ஐ ஸ்பார்க்கிள் ஃபண்ட், சிராடே வென்ச்சர்ஸ் மற்றும் ட்ரீம் இன்குபேட்டர் ஜப்பான் ஆகியவற்றிலிருந்து $36 மில்லியனை பெற்றுள்ளது. 

❖ ஃபேஷன் ஈ-காமர்ஸ் தளமான பர்பிள் ஸ்டைல், லேப்ஸ் ஏஞ்சல் முதலீட்டாளர்களின் குழுவிலிருந்து $10 மில்லியன் திரட்டியது.

❖ EV ஸ்டார்ட்அப் மேட்டர், கேபிடல் 2பி ஃபண்ட் 1, க்ளைமேட் ஏஞ்சல்ஸ் ஃபண்ட், பேரிங் பிரைவேட் ஈக்விட்டி பார்ட்னர்ஸ் மற்றும் எச்என்ஐகளில் இருந்து $10 மில்லியன் திரட்டியுள்ளது. 

❖ பெங்களூரை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் CheQ Digital, கடந்த புதன்கிழமை அன்று வென்ச்சர் ஹைவே மற்றும் 3one4 Capital தலைமையிலான விதை சுற்றில் $10 மில்லியனை பெற்றுள்ளது. இந்த விதைச் சுற்றில் மல்டிபிளை வென்ச்சர்ஸ், வேதா விசி, மற்றும் மார்ஷாட் வென்ச்சர்ஸ் ஆகியோரும் பங்கேற்றனர். 

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): இதற்கிடையில், மொத்த நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்களில் நோட்டோ, ஓபன் சீக்ரெட், மற்றும் அஹோட்ஸ் என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தங்களது நிதி விவரத்தை வெளியிடவில்லை.

 

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் 19 நிறுவனங்களின் நிதி திரட்டல்களை தவிர, மூன்று கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. அந்த வகையில், லென்ட்ரா என்ற நிறுவனம் AI ஸ்டார்ட்அப் TheDataTeam -வையும், லென்ஸ்கார்ட் மற்றும் பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனம் Owndays -வையும், செட்வெர்க் நிறுவனம் SharpTanks மற்றும் Wheels India -வையும் ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கியிருக்கின்றன. 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்