Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவ திருப்பதி சந்திர பகவானின் ஸ்தலமான வரகுண மங்கையின் சிறப்பு..!

Gowthami Subramani September 19, 2022 & 16:45 [IST]
Nava Tirupathi: நவ திருப்பதி சந்திர பகவானின் ஸ்தலமான வரகுண மங்கையின் சிறப்பு..! Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியாகப் போற்றப்படும் சந்திர பகவான் ஆன வரகுணமங்கையைப் பற்றி காண்போம்.

வரகுணமங்கை

நவ திருப்பதியில் இரண்டாவது தெய்வமான வரகுண வல்லி வீற்றிருக்கும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதி ஆகும். இந்த திருத்தலத்தில் மூலவராக விஜயாஸனரும் (பரமபத நாதன்), உற்சவராக எமடர் கடிவான் மற்றும் தாயாராக வரகுண வல்லி, காணப்படுகின்றனர். இந்த புராணத்தின் பெயர் வரகுணமங்கை.

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

வரகுண மங்கை வீற்றிருக்கும் இடமான நத்தம் பெரும்பாலானோர் அறிந்த இடமே. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு, பகவான் காட்சி தந்த தலமாகவே இத்திருத்தலம் உள்ளது. இதில், பிராமணரின் பிரார்த்தனைப் படி விஜயசனர் என்ற திருநாமத்தோடு காட்சி கொடுத்த தலம்.

இத்திருத்தலத்தின் சிறப்பு, நவகிரகத்தில் இரண்டாவது திருப்பதியாக இருக்கும் சந்திரனின் ஸ்தலமாக இருப்பதாகும். இந்த திருத்தலத்தில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 82 ஆவது திவ்ய தேசமாகக் கூறப்படுவதாகும்.

தலம் திறக்கப்படும் நேரம்

தூத்துக்குடியில் உள்ள இந்த திருத்தலம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். மேலும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

வரகுணமங்கை தலத்தின் முகவரி

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) கோவில்,

நத்தம் (வரகுணமங்கை)

தூத்துக்குடி

தமிழ்நாடு

628 601

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: +91 4630 256 476

பிரார்த்தனை செய்தல்

இந்த திருத்தலத்தில் மக்கள் பிரார்த்தனை செய்து நினைத்தது நடக்கும் எனக் கூறுவர்.

கல்வியில் சிறந்து விளங்க, திருமணத் தடை, குழந்தை பாக்கியம் மற்றும் இன்னும் பிற வேண்டுதல்கள் வைத்து பிரார்த்தனை செய்வர்.

சந்திர பகவானின் ஸ்தலமாக இருக்கும் இந்தச் சிறப்பான கோவில் நவ திருப்பதியாக விளங்குவதுடன், பெருமாளின் சிறப்பைப் போற்றுவதாக உள்ளது.

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்