Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi : நவதிருப்பதி சூரிய ஸ்தலம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Manoj Krishnamoorthi September 19, 2022 & 15:30 [IST]
Nava Tirupathi : நவதிருப்பதி சூரிய ஸ்தலம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?Representative Image.

புரட்டாசி மாதம் என்றாலே நாம் செய்யும் வழிபாடு திருமால் வழிபாடு தான். பெருமாள் என்ற உடனே நமக்கு ஞாபகம் வரும் கோவில் திருப்பதி ஆகும். ஆனால் திருப்பதி சென்று பாலாஜி தரிசனம் பெற்றால் கிடைக்கும் யோகம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் அமைந்துள்ள ஒரு ஸ்தலத்தில் உள்ளது. அந்த ஸ்தலம் எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி அறிய வேண்டுமா...! இந்த பதிவில் சிறப்பு வாய்ந்த பெருமாள் கோவில் எங்கு உள்ளது. எப்படி போவது போன்ற கேள்விக்கு பதிலாக இருக்கும். 

அருள்மிகு வைகுண்டநாதர் கோவில்

மும்மூர்த்திகளில் காக்கும் தெய்வமான திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 81 வது திவ்ய தேசமான தூத்துக்குடி அருள்மிகு  வைகுண்டநாதர் திருக்கோவில் சூரிய ஸ்தலமாகும். இது நவதிருப்பதியில் முதல் ஸ்தலமாகும், நவதிருப்பதி என்று குறிப்பிடக் காரணம் ஒவ்வொரு ஸ்தலமும் ஒவ்வொரு கிரக ஸ்தலமாகக் கருதப்படும். 

தல சிறப்பு

1000 வருடங்களுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோவிலின் சிறப்பாக அமைவது கண் இமைக்கும் நேரத்தில் நடை திறந்து சுவாமிக்கு செய்யும் தீபாராதனை ஆகும். இந்த தீபாராதனையை தரிசனம் செய்வதால் பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.  மேலும் ஜாதகத்தில் சூரிய தோஷம் இருப்பவர்கள்  இந்த திருத்தலம் வந்து வைகுண்டநாதரை தரிசனம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது கோவிலில் ஐதீகம் ஆகும். 

நவதிருப்பதிகளில் முதல்  தலமான வைகுண்டநாதர் திருக்கோவிலில் இறைவன் இந்திர விமானத்தில் கீழ் நின்று  கையில் தண்டம் வைத்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.  இறைவனுக்கு குடையாக நிற்கும் ஆதிசேஷன் இருப்பது கைலாயத்தை கண்முன் நிறுத்துவது போல இருக்கும். மூலவரின் சன்னதி அம்மையார் இல்லாமல் இருப்பதும், சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி அன்று சூரிய ஒளி காலையில் இறைவனின் பாதத்தில் விழுவது அதிசயமே ஆகும். 

எப்படி செல்வது?

சூரிய ஸ்தலமான  அருள்மிகு வைகுண்டநாதர் கோவில்  செல்ல தூத்துக்குடி வர வேண்டும். அதன்பின்னர் மதுரை- திருச்செந்தூர் சாலையில் சுமார் 36 கீ.மீ பயணித்தால் நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான வைகுண்டநாதர் கோவிலை அடையலாம். 

முகவரி:

அருள்மிகு வைகுண்டநாதர் கோவில், 

ஸ்ரீ வைகுண்டம்- 628 601, 

தூத்துக்குடி

தொடர்புக்கு: 91 4630 256 476

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்