Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?

Gowthami Subramani September 21, 2022 & 16:40 [IST]
Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் நான்காவது திருப்பதியாகப் போற்றப்படும் புதன் பகவான் ஆன பூமிபாலரைப் பற்றி காண்போம்.

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image

அருள்மிகு பூமிபாலர்

நவதிருப்பதிகளில் நான்காவது திருப்பதியாக விளங்குபவர் அருள்மிகு பூமிபாலர் ஆவார். நவகிரகத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் புதன் பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த தளமாகும். இத்திருத்தலம் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் பூமிபாலகர் பெருமாள், வேதசார விமானத்திற்குக் கீழ் கிழக்குப் பகுதியில் திருமுக மண்டலமாக அருள்பாலிக்கிறார். இவர் மரக்காலைத் தலையின் அடியில் வைத்து சயனத்தில் உள்ளது போல காட்சி தருவார்.

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

இந்த திருத்தலத்தில் பெருமாள் நாபியில் இருந்து, தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் இருக்கும் பிரம்மாவின் தாமரை மலருடன் இணைவது போல இருக்கும். இந்த தலத்தில் பாத தரிசனம் செய்வதற்கு, வெளிப்பிரகாத்தில் உள்ள ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். மேலும், இந்த இடம் இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாகவும் கூறப்படுகிறது. அதாவது, வசிஷ்ட புத்திரர்களால், சாபம் பெற்று ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன், பகவானால் சாப விமோட்சனம் பெற்ற தலமாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தின் சிறப்பைப் பற்றிக் கூறுகையில், அருள்மிகு பூமிபாலகர் தலம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 83 ஆவது திவ்ய தேசமாகக் கூறப்படுகிறது. மேலும், நவ திருப்பதிகளில் நான்காவது திருப்பதியாக போற்றப்படுகிறது. நவகிரகங்களில் புதன் தலமாகக் கருதப்படுகிறது.

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image

தலம் திறக்கப்படும் நேரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருப்புளியங்குடியில் உள்ள இந்த திருத்தலம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். மேலும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image

வைத்தமாநிதி பெருமாள் தலத்தின் முகவரி

அருள்மிகு பூமிபாலகர் கோவில்,

திருப்புளியங்குடி,

தூத்துக்குடி,

தமிழ்நாடு - 628 621

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 4630 256 476

Nava Tirupathi: நவ திருப்பதி புதன் பகவானின் பூமி பாலகரின் சிறப்பைப் பற்றி தெரியுமா..?Representative Image

பிரார்த்தனை செய்தல்

புதன் தலமான இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபடுவதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுவர்.

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்