Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?

Manoj Krishnamoorthi September 22, 2022 & 16:30 [IST]
Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே  நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவதிருப்பதிகளில் ஐந்தாம் திருப்பதியாகப் போற்றப்படும்  அருள்மிகு ஆதிநாதன் திருக்கோவில் வியாழன் தலமாகும். இந்த ஸ்தலத்தில் நடக்கும் நேர்த்திக்கடன், பிரார்த்தனை பற்றிய தகவல்களை கீழ்க்காண்போம்.

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் (Adinatha Temple Tuticorin)

தூத்துக்குடியில் நிலை கொண்டு இருக்கும் அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் நவதிருப்பதி ஐந்தாவது ஸ்தலம் ஆகும், மணவாள மாமுனிவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நம்மாழ்வார் அவதரித்த இத்திருத்தலம் திருநகரி என்று அழைக்கப்படும் பெருமை கொண்டது. நவகிரகத்தில் குருவிற்கு உரிய இத்திருத்தலத்தின் சிறப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு (Nava Tirupathi Guru Temple)

வைணவத்தின் மூலக்கடவுள் திருமாலின் 108 திவ்ய தேசத்தின் 89வது திவ்ச தேசம் என்று அழைக்கப்படும்"அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில்" நவகிரகத்தில் குரு பகவானைக் குறிக்கும் திருத்தலமாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு திசையை நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இத்திருத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார். பெருமாள் இத்திருத்தலத்தில் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. பிரம்மச்சாரியாக இருந்த திருமாலை அடைய லட்சுமி தேவி தவம் இருந்து பெருமாள் கழுத்தில் மாலையாக குடிகொண்டு இருப்பதாகும் ஐதீகம்.  

மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பாக அமைவது இத்திருத்தலத்தில் மூலவரின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் பெரியதாக இருப்பதாகும். இத்திருக்கோயிலில் இருக்கும் 1 அடி நாதஸ்வரம் கல்லால் செய்யப்பட்டது என்பது தெரியாதவாறு தத்துருப்பமாக மரத்தால் ஆனது போல அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பாக இருப்பது நம்மாழ்வார் வீற்றிருந்த 5000 வருடம் பழமையான புளிய மரமாகும்.  

ஒவ்வொரு வருடமும் குரு பெயர்ச்சி அன்றும் விழா கோலம் கொள்ளும் அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயிலலுக்கு 'தாந்த ஷத்திரம்' என்ற பெயரும் உண்டு. இதற்கு காரணம் தாந்தன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய பக்தனுக்கு பெருமாள் மோட்சம் தந்தால் தான் என்று கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் ஒன்றான இத்திருக்கோயிலில் பிரம்மா, சங்கன் முனி, மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் வழிபட்டுள்ளனர். 

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image

தலம் திறக்கப்படும் நேரம் (Nava Tirupathi Guru Temple Timings)

தினமும் காலை 7:30 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் பெருமாள் மதியம் 12:00 மணி வரை பின்னர் மாலை 5:00 முதல் 8:00 வரை காட்சி அளிப்பார்.

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image

முகவரி (Tuticorin Adhinathar Temple Address)

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில்,

ஆழ்வார் திருநகரி,

தூத்துக்குடி- 628 612, 

தூத்துக்குடி மாவட்டம்.

தொடர்புக்கு: 91 4639 273 607

Nava Tirupathi: நவதிருப்பதி 5 வது ஸ்தலம் குரு ஸ்தலம்... எங்கு உள்ளது தெரியுமா..?Representative Image

பிரார்த்தனை செய்தல் (Nava Tirupathi Guru Temple)

இந்த ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றுவதினால் நவக்கிரக தோஷம் விலகும். 

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்