Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..!

Gowthami Subramani September 20, 2022 & 18:30 [IST]
Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் மூன்றாவது திருப்பதியாகப் போற்றப்படும் செவ்வாய் பகவான் ஆன வைத்தமாநிதி பெருமாளைப் பற்றி காண்போம்.

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image

வைத்தமாநிதி பெருமாள்

நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதியாக விளங்குவது வைத்தமாநிதி பெருமாள் ஆகும். இந்த தளத்தில் உள்ள விமானம் ஸ்ரீகர விமானம் ஆகும். சோழ நாட்டில் அமைந்திருக்கும் நவகிரக தலங்களுக்கு ஒப்பிட்டு பாண்டி நாட்டில் நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாகப் போற்றப்படுகிறது.

இந்த தலத்தில் பெருமாளே நவகிரகங்களாக செயல்படுகிறார். இதனால், இங்கு நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி எதுவும் அமைக்கப்படவில்லை. மேலும், அவரவர்களுக்கு இருக்கும் கிரக தோஷங்கள் நீங்குவதற்கு நவ திருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் இந்தப் பெருமாளை வழிபடுவதன் மூலம் கிரக தோஷம் நீங்கும் எனக் கூறுவர்.

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

முந்தைய காலத்தில் பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, குபேரனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவ்வாறு விலகிய நவநிதிகள் நாராயணனிடம் போய் சேர்கின்றன. நாராயணன் இந்த நிதிகளைப் பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால், இந்த பெருமாளுக்கு “வைத்தமாநிதி” என்ற திருநாமம் சூட்டப்பட்டது. குபேரன் இத்தல பெருமாளை வழிபட்டே மீண்டும் நவநிதிகள் பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்தின் சிறப்பைப் பற்றி கூறுகையில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற இத்தலம் 108 திவ்ய தேசங்களில் 87 ஆவது திவ்ய தேசமாக உள்ளது. இது செவ்வாய் பகவானுக்கு உரிய ஸ்தலமாகும். பெருமாள் இந்தத் தலத்தில் தனது வலது தோளிற்குக் கீழ், நவநிதிகளைப் பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image

தலம் திறக்கப்படும் நேரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த திருத்தலம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image

வைத்தமாநிதி பெருமாள் தலத்தின் முகவரி

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் கோவில்,

திருக்கோளூர்,

தூத்துக்குடி,

தமிழ்நாடு - 628 612

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: +91 4639 273 607

Nava Tirupathi: நவ திருப்பதி செவ்வாய் பகவானின் வைத்தமாநிதி பெருமாளின் சிறப்பு..! Representative Image

பிரார்த்தனை செய்தல்

நவக்கிரகங்களில் ஒன்றாய் கருதி போற்றப்படுவதால், நவக்கிரக தோஷங்கள் நீங்க இந்த கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்