Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - கவனம்

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - நிதானம்

கடகம் - பொறுமை

சிம்மம் - வெற்றி

கன்னி - அதிர்ஷ்டம்

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

நாளைய தினம் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பொறுமையை கடைப்பிடியுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. காதலில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரலாம். பேச்சில் கவனம் வேண்டும். துணையுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் அவரசம் வேண்டாம். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். துணையுடன் பேசும்பொழுது வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. வியாபார இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்று. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அனுகூலப் பலன்களை தேடி தரும். கால்கள், தோள்களில் வலி காணப்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [11.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்