Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - நன்மை

விருச்சிகம் - ஜாக்கிரதை

தனுசு - சிக்கல்

மகரம் - பிரச்சனை

கும்பம் - பணவரவு

மீனம் - நிதானம்

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [12.12.2022]

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

அசத்தலாக பேசி அனைவரும் மனதையும் கொள்ளையடிப்பீர்கள். சிறு வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவீர்கள். நிதானமாக செயல்பட்டு சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் பேச்சுவார்த்தை நடத்துங்கள். பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமை கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். எடுத்த அத்துனை முயற்சியும் வெற்றியை கொடுக்கும். கேட்ட இடத்தில் தடையில்லாமல் பணம் கிடைக்கும். கண் சம்பந்தமான பிரச்சனை வரலாம். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

யாருக்கு கடன் கொடுத்தாலும் எழுத்து வடிவில் பரிவர்த்தனை செய்வது நல்லது. இல்லையென்றால் ஏமாற்றம் உங்களுக்கு தான். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால், அனுகூலப் பலன்களை பெறலாம். திருமண காரியங்களில் சிக்கல் விலகும். சிலருக்கு புதிய வாகனம் யோகம் உண்டு. தூரத்து சொந்தபந்தங்களிடம் இருந்து நற்செய்தி தேடி வரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். காதலில் அன்பு பெருகும். வியாபாரம் பிரமாதமாக நடக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஜாக்கிரதை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

ஏதாவது ஒரு பிரச்சனை மனதில் ஏறி அமர்ந்து கொண்டு உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். நண்பர்கள் வழியில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிட்டும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை குறைத்துக்கொள்வதன் மூலம் வீண் சிக்கல்களை தவிர்க்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள். துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு விற்பனை அபாரமான லாபத்தை கொடுக்கும். பூர்வீக சொத்தால் சில பிரச்சனைகளை சந்தீப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அது நல்ல பலனை தாராது. கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் நடக்கும். எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. அரசு வேலையில் இருப்பவர்கள் பைலில் கையெழுத்து போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவீர்கள். பிரச்சனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. வாகங்களில் செல்லும்போது அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். வெளியூர் பயணங்களின் போது பணம் பத்திரம். முதுகு வலி பிரச்சனை ஏற்படலாம். ஆன்மீக வழிபாடு மனநிம்மதியை கொடுக்கும். பணவரவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த இரண்டு ராசிக்காரர்களும் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

பணியிடத்தில் சுமூகமான சூழல் நிலவாது. பொறுமை இழக்க வேண்டாம். நிலம் வாங்கி விற்கும் தொழில், இரும்பு வியாபாரம் மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வருவீர்கள். பெற்றோரிடம் கோபத்தை குறைத்துக் கொள்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். பெண்களுக்கு விலையுயர்ந்த பொருள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்