Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - நன்மை

விருச்சிகம் - சோதனை

தனுசு - தடை

மகரம் - லாபம்

கும்பம் - நலம்

மீனம் - அமைதி

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [11.12.2022]

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு போட்டி தேர்வுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். ஆரோக்கியத்தி எந்த பிரச்சனையும் இல்லை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதமாகும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை குறைத்துக்கொண்டு, அனுசரித்து போவது நல்லது. இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் மனஅமைதி பெறமுடியும். ஆக மொத்தம் சோதனை நிறைந்த நாளாக இருக்கும். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1
 

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, எனவே திட்டமிட்டு நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனை குறையும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். நாளைய தினம் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். தடை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆரவம் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு சோதனை மிகுந்த நாள்.. 11.12.202 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது, அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். சிலருக்கு பூர்விக சொத்து மூலம் பணவரவு உண்டு. புதிய முயற்சிகளில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிடம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்