Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - தனம்

ரிஷபம் - கவனம்

மிதுனம் - லாபம்

கடகம் - சிறப்பு

சிம்மம் - கவலை 

கன்னி - உதவி

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். துணையுடன் பேசும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பொறுமை அவசியம். கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான். எந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், வெளியூர் வேலைகளில் அலைச்சலும் உடல் அசதியும் ஏற்படும். சுபவிரைய செலவுகள் ஏற்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9
 

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். இருப்பினும், கவனமாக இருக்க வேண்டும். பணியிடை நீக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. குவாரி வைத்திருப்பவர்களுக்கு பொற்காலம் தான். சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவலி ஏற்படும், கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை பின்பற்றுவதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. மணல், செங்கல் வியாபாரம் செய்பவர்களுக்கு கொள்ளை லாபம். உறவினர்களிடம் அனுசரித்து போவதன் மூலம் குடும்பத்தில் சிக்கலை தவிர்க்கலாம். வெளிநாடு பயணங்கள் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். சொந்தபந்தங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கிறது. சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

நீண்ட நாட்களாக திட்டமிட்ட காரியம் தடையில்லாமல் நடக்கும். புதிய தொழிலில் இறங்கவும் யோகம் உண்டு. சுபகாரியங்களில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. கால் வலி பிரச்சனை ஏற்படும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். துணையுடன் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். இதனால், சின்ன மனஸ்தாபம் ஏற்படும். செலவுகள் தேடி வரும். கவலையாக உணர்வீர்கள். அனைவரிடம் நல்ல அணுகுமுறை இருந்தால் பிரச்சனை இல்லை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம் தான்.. 12.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். அடுத்தவர பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். சிலருக்கு வேலை உயர்வும் ஏற்படும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து நடந்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 1

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [12.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்