Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் செவ்வாய் கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - சிறப்பு

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - ஜாக்கிரதை

மகரம் - அனுகூலம்

கும்பம் - ஆதாயம்

மீனம் - உழைப்பு

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [13.12.2022]

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

நேர்மறையான அணுகுமுறை மூலம் அசாத்தியமான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். பணவரது சிறப்பாகவே இருக்கும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

அதிக சிந்தனை உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும். பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். ஜாக்கிரதை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண தேவை பூர்த்தியாகும். சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களின் ஆதரவு பெருகும். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இதனால், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வார்த்தையில் தான் ஆபத்தே.. 13.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமாக தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்