Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!

Gowthami Subramani Updated:
அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image.

புதிய வருடம் பிறக்கும் போது, ஒவ்வொருவரும் அவர்களின் எதிர்கால வாழ்வில் என்ன நடக்க இருக்கப் போகுது என்பதைத் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். எத்தனையோ ஆசைகள், கனவுகள் இப்போது நிறைவேறும், அப்போது நிறைவேறும் என நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த வகையில், வீடு கட்டுவது என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. இருப்பினும், ஜாதக முறைப்படி ஒவ்வொருவரும் அவர்களுக்கான யோகம் வரும் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் அதிர்ஷ்டம் உள்ள ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

எல்லோரின் கனவு

நம்மில் பலருக்கு, சொந்த வீடு என்பது கனவாகத் தான் இருந்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு, சொந்த வீடு வாங்க அல்லது கட் ட வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி வருபவர்கள் பலர். ஆண்டுதோறும், ராசிக்காரர்களின் விதிப்படி ஒவ்வொரு யோகம் கூடி வரும். அந்த வகையில் 2023-ல் வீடு கட்டப்போகும் ராசிக்காரர்களில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்க.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

விருச்சிகம்

அதிர்ஷ்டமான யோகக்கார ராசிக்காரர்களுள் விருச்சிக ராசிக்காரர்களும் அடங்குவர். இவர்கள், நீண்ட நாள்களாக எண்ணிய வீடு கட்டும் அல்லது வாங்கும் திட்டம், இந்த ஆண்டு நிறைவேறக் கூடும். 2023- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு கஷ்டங்கள் எழக் கூடும்.

சனிபகவான், விருச்சிக ராசியின் நான்காவது இடத்திற்கு செல்வதால், சுப நிகழ்வுகள் நடக்கும். அதே போல, விருச்சிக ரா அதிபதியாக விளங்கும் செவ்வாய், சொத்து, செல்வம், வீடு, நிலம் போன்றவற்றை வாரி வழங்க உள்ளதால், இந்த ஆண்டு உங்களுக்கு யோகமாக அமையும்.

தற்சமயம், சனி பகவான் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். ஜனவரி 17 ஆம் தேதி, இவர் நான்காம் வீடான கும்ப ராசிக்குள் நுழைவதால், புதிய வீடு, சொத்து வாங்குவதற்கான அதிர்ஷ்டம் ஏற்படும். அதன் படி, விருச்சிக ராசிக்காரர்களே புதிய வீடு கட்ட அல்லது இருக்கும் வீட்டை புதுப்பிக்க நினைப்பவர்கள், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவேற்றலாம்.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

கன்னி

பண பற்றாக்குறை, மனதில் குழப்பம் இது போன்ற எவ்வளவு துன்பங்களைச் சுமந்த கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு வீடு வாங்குவதற்கான அதிர்ஷ்டம் உள்ளது. நீண்ட நாள்களாக இருந்த இவர்களது கனவு நிறைவேறக் கூடிய ஆண்டாக அமையும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே சிறப்பான நாளாக அமையும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், ஒரு பெரிய அசையா சொத்துக்களை வாங்குவதற்கான யோகம் உள்ளது. இத்துடன், பணப் பற்றாக்குறை அனைத்தும் நீங்கி, புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமைகிறது. அதே சமயம், மே முதல் ஆகஸ்ட் மாதத்தில் அசையா சொத்துக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வீடு வாங்க உகந்த காலமாக அமைகிறது. மேலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீடு வாங்குபவர்களுக்கு நல்ல பலனை அளிக்க உள்ளது.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

மேஷம்

வரும் 2023 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே, குரு பகவான் 12 ஆம் வீட்டில் இருப்பார். 12 ஆம் வீட்டில் குரு இருக்கும் போது, பண விரயம் உண்டாகும். இதனால், மேஷ ராசிக்காரர்கள் பணத்தைப் பாதுகாப்பாக செலவிட வேண்டும். அதே போல, 2023-ன் பாதியில், இவர் 1 ஆம் வீடான மேஷத்திற்கு வருவதால், அதிர்ஷ்டம் அளிக்கும் காலமாக அமையும். அதாவது, புதிய வீடு கட்டுவது அல்லது வாங்குவது, சொத்து சேர்ப்பது, போன்ற லாபகரமான நிலை ஏற்படும்.

மேஷ ராசிக்காரர்கள் புதிய வீடு வாங்க முடியவில்லையெனில், சொத்துக்களில் முதலீடு செய்யலாம். அதிலும், மே முதல் அக்டோபர் மாதங்களுக்கு இடையே முதலீடு செய்வது சிறப்பானதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல், இது வரை இருந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் விலகி உங்களுக்கு சாதகமாக அமையும்.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

மிதுனம்

சொந்த வீடு வைத்திருக்கக் கூடிய அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறவர்களுள் மிதுன ராசிக்காரர்களும் ஒருவர். அடுத்த ஆண்டு, மிதுன ராசிக்காரர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ திட்டமிட்டிருப்பின், இந்த ஆண்டு நிறைவேறக் கூடிய ஆண்டாக அமையும். இந்த ஆண்டின் துவக்கத்தில், அசையா சொத்துக்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். 2023-ன் நடுப்பகுதியில், சனிபகவானின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதுடன் நல்ல லாபம் கிடைக்கும்.

இதுவரை நீங்கள் முதலீடு செய்திருப்பின், அந்த நிதியைப் பயன்படுத்தி, அதனை மீண்டும் பலமடங்காக்க முயற்சி செய்வீர்கள். அதே போல, உங்களுக்கு வீடு வாங்க உகந்த மாதங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஆகும். இருப்பினும், இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு சிறப்பான செழிப்பை உருவாக்கும்.

அடிச்சது ஜாக்பாட்.. 2023-ல் சொந்த வீடு கனவு நினைவாகப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவங்க தான்…!Representative Image

துலாம்

2023 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கும் யோகமான காலமாகும். வீடு வாங்குவதற்கான சுபயோகம் உடைய ராசிகளில் துலாம் ராசியும் அமைகிறது. இந்த 2023 ஆம் ஆண்டின், மே முதல் ஜூன் மாதம் வரை மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சிரமமாக இருப்பினும், நடுப்பகுதியில் நல்ல முன்னேறம் உண்டு. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

வரப்போகும் 2023 ஆம் ஆண்டு புதிய வீடு அல்லது அசையா சொத்து வாங்குவதற்கான ஏற்புடையதாக அமைகிறது. இந்த ஆண்டு முழுவதுமே, நல்ல யோகமும், சிறப்பானதாகவும் அமையக் கூடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்