Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்: அதிர்ஷ்டமும், ஆப்பும் மாறி மாறி அடிக்கும்.. எதற்கும் தயாரா இருக்கனும் மீன ராசிக்காரங்களே..

Nandhinipriya Ganeshan Updated:
மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்: அதிர்ஷ்டமும், ஆப்பும் மாறி மாறி அடிக்கும்.. எதற்கும் தயாரா இருக்கனும் மீன ராசிக்காரங்களே..Representative Image.

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களே! உங்க ராசி நாதன் குருபகவான் உங்க ராசியிலேயே இருக்கிறார், இதனால், 2023 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. இத்தனை நாட்களாக தடைபட்ட திருமணம் கைக்கூடி வரும். பிள்ளைகள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நன்மை நடைபெறும். 

தனவரவு எப்படி இருக்கும்?

மே மாதத்திற்கு பிறகு உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் குருபகவான் சென்று ராகு உடன் இணைவதால் பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும், ஜனவரி மாதம் 12 ஆம் வீட்டில் சனி சஞ்சரித்த பிறகு பணம் சம்பந்தமான சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே, தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல், ஏப்ரல் இறுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை மிகவும் சவாலான நிலையை சந்திக்க நேரிடும். எனவே, இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயம், ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திடீர் பண ஆதாயங்களை காணலாம். 

வேலை மற்றும் தொழில்

ஆண்டின் ஆரம்பத்தில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். புதிதாக வேலை தேடிபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கும் வேலை கிடைக்கும். இருப்பினும், மே - ஜூலை மாதங்களுக்கு இடையில் வேலை இழப்பு மற்றும் வேலை மாற்றம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். எனவே, எதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வியாழன் 7 வது வீட்டிலும் சனி 11 வது வீட்டிலும் இருப்பதால், வணிகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். லாபம் இருமடங்காக மாறும். இதனால், உங்க தொழில் புதிய உயரத்திற்கு செல்லும். 

இதில் கவனம் தேவை

வாகனத்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜனவரி - மார்ச் வரை வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். வாகனம் வாங்க வேண்டும் நினைத்தால் மே - ஜூலை காலக்கட்டத்தில் வாங்கிக்கொள்ளலாம். சிலருக்கு சொத்து வாங்குவதற்கு யோகம் உண்டு. இன்னும் சிலர் புது வீடு கட்டி குடியேறவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பெரிய நோயின் பிடியில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். 

திருமண வாழ்க்கை

இந்த வருடம் திருமணமான தம்பதிகளுக்கு அற்புதமாக ஆண்டாக இருக்கும். சனி 11 ஆம் வீட்டிலும், சூரியன் 10 ஆம் வீட்டிலும், வியாழன் 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், திருமண வாழ்க்கை அழகாக மாறும். இருவருக்குமிடையே நல்ல அன்பு, பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். இருவரும் கலந்து பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். ஜனவரி 17 ஆம் தேதி 12 ஆம் வீட்டில் சனி இருப்பதால் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், இதனால் உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருந்து சிக்கலை தீர்க்க முயற்சி செய்யுங்கள். அக்டோபர் மாதத்திற்கு பிறகு அனைத்து பிரச்சனையிலிருந்து விடுதலை பெற்று பெருமூச்சு விடுவீர்கள். 

பரிகாரம்:

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபாடு செய்துவந்தால், அனுகூலப்பலன்களை அடையலாம். முடிந்தால், ஒருமுறை திருப்பதி திருவேங்கடவனை தரிசித்து வாருங்கள்; குழப்பங்கள் நீங்கி வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்