Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்: பாடாய் படுத்திய அஷ்டம சனி.. இனி விடிவு காலம் தான்.. தொட்டது துலங்கும்..

Nandhinipriya Ganeshan Updated:
மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்: பாடாய் படுத்திய அஷ்டம சனி.. இனி விடிவு காலம் தான்.. தொட்டது துலங்கும்..Representative Image.

கடந்த சில ஆண்டுகளாகவே இருந்த பிரச்சனைகள், தடைகளை தீர்க்கூடிய ஆண்டாக இருந்த 2023 புத்தாண்டு அமையப் போகிறது. எந்தப்பக்கம் போனாலும் முட்டுச்சந்தாக இருந்தது. நெருங்கிய சொந்தபந்தங்கள் கூட வெறுத்து ஒதுக்கினார்கள். என்னடா வாழ்க்கை இது என்று கூட யோசித்து இருப்பீர்கள். ஆனால், இந்த புத்தாண்டு உங்க துயரங்களுக்கு அனைத்திற்கும் விடிவு காலமாக இருக்க போகிறது.  கடந்த சில ஆண்டுகளாக சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்தார். இனி, பாக்ய ஸ்தானத்தில் 9 ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அதேபோல், குரு பகவானும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால், பல வகையில் நன்மை நடக்கும். நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகளும் அமையும்.

கடன் பிரச்சனை நீங்கும்

கடந்த ஐந்து வருடங்களாக அஷ்டம சனியால் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை பட்டு வந்த நீங்க, அதிலிருந்து ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். இனி எல்லா காரியங்களும் வெற்றியை தேடிக் கொடுக்கும். 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே பட்ட கடன்கள் முடிவுக்கு வரப்போகிறது. கடனுக்கு மேல் கடன் வாங்கி அடிபட்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களே, இதுக்கு மேல் அந்த கவலை வேண்டாம். பணத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரப்போகின்றன. 

லாபம் இரட்டிப்பாகும்

கடனால் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு இருப்பீர்கள். அதுக்கும் இனிக்கு விடிவு காலம் தான். சமுதாயத்தில் பட்ட அவமானங்கள் அனைத்திற்கும் முடிவுக்கு வர பிறக்கப் போகிறது. குருபகவான் ஏப்ரல் 2023 வரை உங்க ராசிக்கு 10 ஆம் இடமான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சொந்த தொழில், வியாபாரம் சிறக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்

இதுவரை குடும்பத்தில் இருந்த வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்து அவரின் 7ம் பார்வையால், ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் உங்களின் இளைய சகோதரருடன் இருந்த மன கஷ்டம், வருத்தம் தீரும்.

அதிர்ஷ்டம்

தந்தை ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால், உங்களின் மனைவிக்கு யோகம் உண்டாகும். மனைவியால் உங்களுக்கும் அனுகூல பலன் கிடைக்க பெறும். நினைத்த காரியம் கைகூடும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. சிலருக்கு வீடு, பொன், பொருள் வாங்கும் யோகமும் கைகூடி வரும்.
மேலும், யாரிடம் பேசும் போதும் கவனமாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.  ஆரோக்கியம் மேம்படும். கடவுளின் நற்கருணை உங்களுக்கு கைகூடி வரப்போகிறது.

பரிகாரம்:

வியாழன், சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள். தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது ஏதாவது ஒரு சனி பகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை சேர்க்கும். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்