Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்: செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசியினரே.. இந்த பரிகாரத்த பண்ணுங்க.. வெற்றிகள் தேடி வரும்..

Nandhinipriya Ganeshan Updated:
மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்: செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசியினரே.. இந்த பரிகாரத்த பண்ணுங்க.. வெற்றிகள் தேடி வரும்..Representative Image.

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்க ராசியின் அதிபதியான செவ்வாய் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பார். இதனால், நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். இருந்தாலும், உங்க பேச்சு மற்றும் செயல்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உறவில் அதுவே பெரிய ஆப்பாக வந்து நிற்கும். அதேபோல், ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 11 ஆவது வீட்டிற்கு, அதாவது லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இதனால், தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். பல நாட்களாக முடங்கிக் கிடந்த உங்களது திறமைகள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதேபோல், உங்களது மூன்றாவது நபர் தலையீட்டை முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுவது நல்லது. மேலும், செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாகவும் அமையும். 

இதுவரை இருந்து வந்த திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் உண்டாகும். அதேபோல், சொந்த செய்யும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பு இருந்தால் சீரான வளர்ச்சியும் ஆதாயமும் கிட்டும். பொது இடங்களில் பேசும்போது வார்த்தைகளில் நிதானமாக இருக்க வேண்டும். வீண் ரோஷங்களை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் சகோதர சகோதரிகளின் ஆதரவு கைக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். 

பரிகாரங்கள்:  

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலை முருகப்பெருமானை செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் சென்று தரிசித்து வந்தால், கஷ்டங்கள் யாவும் விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகுவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யலாம். அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்