Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,168.44
545.35sensex(0.75%)
நிஃப்டி22,222.50
167.45sensex(0.76%)
USD
81.57
Exclusive

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்: வேலை பறிப்போகாமல் இருக்கணும்னா இத பண்ணுங்க.. தொழில் எப்படி இருக்கும்?

Nandhinipriya Ganeshan Updated:
சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்: வேலை பறிப்போகாமல் இருக்கணும்னா இத பண்ணுங்க.. தொழில் எப்படி இருக்கும்?Representative Image.

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் சூரிய பகவான் நிறைய நன்மைகளை தரப்போகிறார். தையரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு இவ்வளவு நாட்களாக வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால், குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைக்கிறது. இதனால், புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்குபுரமோஷன் நிறைந்த ஆண்டு. இருப்பினும், அரசு, தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல உயரங்களை அடையவீர்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். 

வேலையில் கவனம்

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு மேஷ ராசியிலிருந்து உங்க ராசிக்கு ஒம்பதாம் வீட்டில் நுழைகிறார், இதனால் திடீர் நன்மைகளை கொடுக்கும். பண வருமானமும் அபரிமிதமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். ஆனால், குரு பகவான் ராகு பகவான் உடன் இணைந்திருப்பதால் குரு சண்டால் யோகம் உருவாகும். அதனால், உங்கள் தந்தைக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பாடு அதிகரிக்கலாம். யாரை நம்பியும் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

பண இழப்பு

அக்டோபர் மாதத்தில் ராகு உங்க 8 ஆவது வீட்டில் பெயர்ச்சி செய்வதால், வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும். அதேபோல், சாதகமான சூழ்நிலை இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே பண விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். அதேபோல், வாகனத்தில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. 

குடும்ப வாழ்க்கை

திருமணமானவர்களுக்கு மாமியாரின் ஆதரவு பெருகும். ஆனால், உங்க துணையுடன் தேவையற்ற பேச்சை குறைத்துக்கொள்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியம். இதன் மூலம் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்த ஆண்டு நீங்கள் அணிய வேண்டிய நிறங்கள் வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு, மெருன். காதல் விவகாரங்களில் வெற்றியை கொடுக்கும் ஆண்டாகவும் உள்ளது. காதலில் இருந்த கசப்பு நீங்கி ஒருவரையொருவர் அன்பாகப் பார்க்கும் உணர்வு வளரும். 

பரிகாரம்:

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குரு பகவான் கோவில் அல்லது வேறு நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். பௌர்ணமி நாட்களில் அல்லது ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யலாம். பெருமாளை வணங்கி வருவதன் மூலம் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் பெறமுடியும்.

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்