Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்: விபரீத ராஜ யோகத்தை பெறக்கூடிய ரிஷப ராசிக்காரர்களே.. நிறைய நற்பலன்களை அனுபவிக்க தயாரா?

Nandhinipriya Ganeshan Updated:
ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்: விபரீத ராஜ யோகத்தை பெறக்கூடிய ரிஷப ராசிக்காரர்களே.. நிறைய நற்பலன்களை அனுபவிக்க தயாரா?Representative Image.

தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடப்போகிறீர்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கலைத்துறை, அழகு, சமையல் துறை என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். 

ராஜயோகம்

சனிபகவானின் பார்வையும் சாதகமான இடங்களில் விழுவதால் உங்களுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கிப்போகிறது. 12 ஆம் வீட்டில் ராகுவும், 6 ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பதால் திருமண யோகம் பெறக்கூடிய அற்புத ஆண்டாக இருக்கும். உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல பேரும் புகழும் அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்களுக்கு இது விரைய ஸ்தானம் என்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். எனவே, பங்குச்சந்தை வர்த்தகத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. 

வேலை கிடைக்கும்

குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் தற்காலிகமாக பிரிந்து இருந்தாலும், இப்போது மீண்டும் இணைவீர்கள். இதுவரை சொல் பேச்சு கேட்காமல் இருந்து வந்த குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்க நல்ல நேரம். இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த ஆண்டு காதலிக்கத் தொடங்க வாய்ப்பு உள்ளது. காதலிப்பவராக இருந்தால் பெற்றோரிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும். மாணவர்கள் நினைத்த கல்லூரிக்கு சென்று படிப்பீர்கள். அரசு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு, வேலை கிடைக்க சாதக வாய்ப்புகள் உண்டு. 

கவனம் தேவை

இத்தனை நாட்களாக போட்டு பாடாய் படுத்திய மனக் கவலை, வலி போன்றவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், வாகனங்களில் செல்லும் போது கவனத்தோடு இருக்க வேண்டும்.

பரிகாரம்:  

ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள். வீட்டிற்கு அருகில் இருக்கும் சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். பெருமாளை வணங்கி வருவதன் மூலம் நிதி நிலைகளில் அதிர்ஷ்டத்தையும், வளர்ச்சியை காணலாம். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்