Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,941.96
135.81sensex(0.18%)
நிஃப்டி22,416.25
37.85sensex(0.17%)
USD
81.57
Exclusive

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்: என்னடா இது, கடக ராசிக்கு வந்த சோதனை.. இப்டி ஒரு மோசமான வருடமா?

Nandhinipriya Ganeshan Updated:
கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்: என்னடா இது, கடக ராசிக்கு வந்த சோதனை.. இப்டி ஒரு மோசமான வருடமா?Representative Image.

சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களே.. இந்த புத்தாண்டு ஆனந்தமும் கவலையும் கலந்த கலவையாக இருக்கப்போகிறது. மே மாதம் வரை உங்களுக்கு குருவின் பார்வை இருப்பதால், குரு பார்த்தால் கோடி நன்மையை பெறுவீர்கள். இருப்பினும், புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை கொண்ட கடக ராசியினருக்கு சனி தசை நடக்கும் என்பதால் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரை நம்பியும் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 

முக்கிய பெயர்ச்சியால் ஆபத்து

2023 ஆம் ஆண்டு குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி என முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி அடுத்தடுத்து நடப்பது கடக ராசிக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் கடக ராசியினரின் தொழில், உத்தியோகம், வியாபாரம் என எல்லா விஷயங்களிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல், வாய்ப்புகள் தேடி வந்தாலும் அவை பெரிய அளவில் திருப்தி தரக்கூடியதாக இருக்காது. 

பணியில் கவனம்

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். என்ன தான் கஷ்டப்படாலும் அதில் ஒருவித திருப்தியற்ற மனநிலையிலேயே இருப்பீர்கள். அதேபோல், வேலையில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. மேலும், வேலை சம்பந்தமான விஷயங்களை தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டு, உங்க வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

திருமணம் தாமதமாகும்

குருபகவான் 9 ஆம் இடத்தில் இருப்பதால், சுப காரியங்கள் சார்ந்த விஷயங்களிலும், புதிய முயற்சிகளில் நன்மைகளும் நடக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாகவும் உள்ளது. அதேசமயம் அஷ்ட சனி இருப்பதால், சில பொருளாதார தடைகளும் வரும். எனவே, பணத்தை கையாளுவதில் அதிக கவனம் வேண்டும். லாட்டரி, ரேஸ் போன்ற சூதாட்ட விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது. அதேபோல், 8ல் சனி செல்வதால் திருமண வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் தாமதமாகும். காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மிகவும் போராட்டமான சூழல் ஏற்படும். 

குடும்ப வாழ்க்கை

திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வது மட்டுமில்லாமல் மரியாதை கொடுத்து பேசுவது அவசியம். இல்லையென்றால், தம்பதிகளுக்கு இடையில் மிகப் பெரிய பிரிவை ஏற்படுத்திவிடும். எனவே, வார்த்தையில் கவனம் தேவை கடக ராசிக்காரர்களே. மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறடிக்காமல், படிப்பில் கவனத்தில் செலுத்தினால் அனுகூலப் பலன்களை பெறலாம். 

உடல்நலத்தில் கவனம்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட இருப்பதால், உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை. அதேபோல், வண்டி வாகனங்களில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பங்கு சந்தை, முதலீடு போன்ற விஷயங்களில் அனுபவமிக்க நபரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு அதன்பிறகு இறங்குவது நல்லது. இல்லையென்றால், அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை மற்றும் அமாவாசைகளில் அசைவ உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அருகில் இருக்கும் சனிபகவான் கோவில் அல்லது நவகிர கோவிலுக்கு சென்று வருவதன் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள். பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருந்தால், வாழ்க்கையில் சில அனுகூலப் பலன்களை பெறலாம். முடிந்தால், காலஹஸ்தி ஒருமுறை சென்றுவாருங்கள். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்