Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 73,010.12
-132.68sensex(-0.18%)
நிஃப்டி22,173.65
-39.05sensex(-0.18%)
USD
81.57
Exclusive

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு திருமண பாக்யம் உண்டா? பரிகாரம் என்ன?

Nandhinipriya Ganeshan Updated:
கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு திருமண பாக்யம் உண்டா? பரிகாரம் என்ன?Representative Image.

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி தேடி வரும். அதை அனுபவிக்க தயாராக இருங்க. எதிரிகள் தொந்தரவு நீங்கும். சனி பகவானும் சாதகமாக இருப்பதால் புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இருப்பினும், எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் இருமனநிலையை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு, நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்துக்  கொண்டிருந்த சொத்த வாங்கும் யோகம் உண்டு. 

காதல் வாழ்க்கை

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு காதல் உறவில் சோதனைகளை சந்திப்பீர்கள். உங்க துணை ஒரு சில காரணங்களால் உங்களை விட்டு சில காலம் பிரிந்து இருக்கலாம். எனவே, முரணான பேச்சை தவிர்ப்பது நல்லது. ஆனால், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணயோகம் உண்டு. நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்

தொழிலில் எப்படி இருக்கும்?

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நீங்க உங்க தொழில் குறித்த சரியான முடிவை எடுக்க வேண்டும். இதனால், தொழிலில் முன்னேற நிறைய வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வியாபாரத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். எனவே, எதையும் திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது. அதுவே, அக்டோபர் - டிசம்பர் வரை பணவரவில் நல்ல மாற்றம் ஏற்படும். இதனால், சேமிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும். 

மாணவர்களுக்கு

இத்தனை நாட்கள் பட்ட கஷ்டம் வீண் போகாது. இருப்பினும், வருடத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருக்கும். இந்த சமயத்தில் ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாரானால் வெற்றி கிடைக்காது. எனவே, மனம் தளராமல் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துங்கள், நிச்சயம் வெற்றி அடைவீர்கள். அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலக்கட்டத்தில் உங்களுடையை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும். 

பொருளாதாரம் சிறக்குமா?

இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்களின் சேர்க்கையால் வருடத்தின் முதல் பாதி சாதகமானதாக இருந்தாலும், நிதானமும், சேமிப்பும் மிகவும் அவசியம். ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த மாதத்தில் செய்யுங்கள். ஆனால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது சிறந்தது. அதுவே, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சூதாட்டம், லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் நஷ்டத்தை அடைவீர்கள். 

குடும்பத்தில் சிக்கல்

ராகுவின் பார்வையால் குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். சொந்தபந்தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வெடிக்கும். ஆனால், விட்டுக்கொடுத்து போகும் வரை உங்களுக்கு பிரச்சனையில்லை. இந்த ஆண்டு குடும்பத்தில் வயதானவர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்ரல் முதல் மே வரையில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். வாழ்க்கையில் அனுகூலப் பலன்களை அனுபவிக்க உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6. 

பரிகாரம்:

புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி பெருமாள் வணங்குங்கள் நல்லதே நடக்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்த்துவிடுங்கள். தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் அல்லது திருநள்ளாரில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள். 

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்