Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 8 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - சோதனை

ரிஷபம் - சிறப்பு

மிதுனம் - அனுகூலம்

கடகம் - சிக்கல்

சிம்மம் - செலவு

கன்னி - உதவி

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும். வார்த்தைகளில் கவனம் தேவை. நெருங்கியவர்களிடம் வீண் கோபத்தை காட்ட வேண்டாம். பணியிடத்தில் சகபணியாளர்களை அனுசரித்து போவது நல்லது. சகபணியாளர்களிடம் உயர் அதிகாரிகளை குறை சொல்வதை தவிர்க்கவும். பிறகு, வேலைக்கு உலை வைத்துவிடும். தேவையில்லாத பிரச்சனைக்காக உங்களுக்கும் உங்க துணைக்கும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது, அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தொடங்கும் புதிய முயற்சி பெரிய வெற்றிக்கு வழி காட்டும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். நெருக்கமானவர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். இதனால், இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இழுபறியாக இருந்த கடன் வந்துசேரும். சேமிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

பிள்ளைகளின் விரப்பத்தை நிறைவேறுவீர்கள். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட சில விஷயங்கள் உங்களை வந்தடையும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உயரதிகாரிகளால் பாராட்டை பெறுவீர்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவ்வளவாக இருக்காது. பிறக்கு கடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருட்டு போக வாய்ப்பிருப்பதால் பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

எந்த காரியத்திலும் ஒரு பதட்டத்தோடே இருப்பீர்கள். எதையும் ஒரு முழுமனதோடு செய்ய முடியாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய நபரிடம் பேசும்போது அளவோடு இருப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய நல்ல நாள் அல்ல. சகபணியாளர்களிடம் அன்பான அணுகுறை இருந்தால் பிரச்சனையை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்வதை தவிர்க்கவும். துணையுடன் அவரின் பிறந்த வீட்டாரை பற்றி பேசுவதை தவிர்க்கவும். முதுகுவலி ஏற்படலாம். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மனதில் கவலையை ஏற்படுத்தலாம். புதிய நபரால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. பதட்டம் காரணமாக பணியிடத்தில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மனைவின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். குடும்ப பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வராது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | இந்த ராசியினர் எதை பேசினாலும் அது சிக்கலில் தான் முடியும்.. 23.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Rasi Palan]

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். அனைவரிடமும் அக்கறையும் அன்பும் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர் வீட்டு திருமணத்தில் பங்கு கொள்வீர்கள். பணியிடத்தில் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் லாபம் இரட்டிப்பாக இருக்கும். இதனால், சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [23.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்