Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - கவனம்

விருச்சிகம் - வெற்றி

தனுசு - கோபம்

மகரம் - சிக்கல்

கும்பம் - சிறப்பு

மீனம் - அதிர்ஷ்டம்

நல்ல நேரம்:

காலை: 07.15 - 08.00 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [25.12.2022]

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

இன்னைக்கு எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுபார்கள். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. ஏனென்றால், இன்றைய நாள் உங்களுக்கு சரியில்லாமல் இருக்கிறது. தேவையற்ற செலவுகள் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் இன்றைய நாள் உங்க பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. இன்னைக்கு உங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். இன்னைக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். இன்று நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அடுக்கிக் கொண்டே போகும், இதனால் இன்னைக்கு செய்ய வேண்டிய பணிகள் தள்ளிப் போகும். உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள உங்களுடைய குடும்பத்தினர் போராடுவார்கள். புதிய வியாபாரம் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் துணை உங்களை கடுப்பாக்குவார். டென்ஷன் ஆக வேண்டாம். பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். தொண்டை சம்பந்தமான பிரச்சனை வரலாம். எனவே, குளிர்ப்பானங்களை தவிர்த்துவிடுங்கள். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும். பணத்தை கையாளும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், இழப்பு உங்களுக்கே. குடும்பத்தில் அனுசரித்து சென்றால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். இருப்பினும் நீங்க அனுசரித்து போவது நட்பை வளர்க்கும். மேலும், மேலதிகாரியின் அன்பும் ஆதரவும் கிட்டும். கணவன் - மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்களால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பிறருடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் நல்ல முறையில் இருக்கும். உங்கள் துணையுடன் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய பார்ட்னர் உதவிகரமாக இருப்பார். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த 2 ராசியினரும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

சில விஷயங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். முக்கிய முடிவுகளை எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சிலருக்கு திறமைக்கு கேற்ற பரிசு காத்திருக்கிறது. உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆக மொத்தத்தில் அதிர்ஷ்டமான நாள் என்றே சொல்லலாம். அதிர்ஷ்டம்!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்