Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - முயற்சி

ரிஷபம் - செலவு

மிதுனம் - தனவரவு

கடகம் - பொறுமை

சிம்மம் - களிப்பு

கன்னி - எச்சரிக்கை

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Vijay Horoscope | அரசியலுக்கு வரப்போவது உறுதி.. விஜய் ஜாதகம் சொல்வது என்ன?

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

இன்று தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும். உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் எழும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எந்த செயல்களை செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும். பணியிடத்தில் சுமை அதிகரிக்கும், இதனால் பதட்டமாக உணர்வார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் பணிச்சுமை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தவறுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துணையிடம் கோபமாக நடந்துக் கொள்ள வேண்டாம். சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். தனவரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். செலவுகள் அதிகரிக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அனுகூலப் பலன்களை அடைய முடியும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கும் நாள். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | மிதுன ராசியினருக்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு? 24.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். எச்சரிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [24.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்