Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - தன்நம்பிக்கை

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - லாபம்

கடகம் - பொறுமை

சிம்மம் - சுபம்

கன்னி - உதவி

நல்ல நேரம்:

காலை: 07.15 - 08.00 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் | Mesham Nalaya Rasi Palan

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். தன்நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் | Rishabam Nalaya Rasi Palan

சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்ற கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும், இதனால் சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் | Mithunam Nalaya Rasi Palan

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். இருப்பினும், கவனமாக இருக்க வேண்டும். பணியிடை நீக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. குவாரி வைத்திருப்பவர்களுக்கு பொற்காலம் தான். சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவலி ஏற்படும், கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் | Kadagam Nalaya Rasi Palan

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். துணையுடன் பேசும்பொழுது வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. வியாபார இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் | Simmam Nalaya Rasi Palan

உத்தியோகத்தில் திறமையாக செயல்பட்டால் நல்ல பலன்களை பெறலாம்.  முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்து காணப்படும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் ஏறி, இறங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் பேச்சை தவர்ப்பது நல்லது. சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும்.. 25.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி | Kanni Nalaya Rasi Palan

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தொழிலில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். சிலருக்கு பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து நடந்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [25.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்