Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 11 ஆம் நாள் திங்கட்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - முயற்சி

விருச்சிகம் - சுபம்

தனுசு - தடை

மகரம் - கவனம்

கும்பம் - நிதானம்

மீனம் - வெற்றி

நல்ல நேரம்:

காலை: 06.15 - 07.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [26.12.2022]

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். திருமண சுபமுயற்களில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சூழ்நிலையை பொறுமையுடனும் உறுதியுடனும் எதிர்க்கொள்ள வேண்டிய நாள். வீண் செலவுகள் தேடி வரும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது அதிகப்படியான பணச்செலவுகளை குறைக்கும். துணையுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். எனவே, இருவரிடமும் நல்ல புரிந்துணர்வு இருந்தால் பெரிய சண்டையை தவிர்க்கலாம். பதட்டத்தால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

எந்த செயல்களையும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.  இன்று மிகவும் வெற்றிகரமான நாள். நேர்மறை எண்ணங்களால் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டையும், பரிசையும் பெறுவீர்கள். சிலருக்கு தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் அன்பும், பாசமும், அக்கறையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். சுபம்! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

புதிய முயற்சிகள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குழப்பம் ஏற்படும். எனவே, இலக்குகளை திட்டமிட்டு மேற்கொள்வது அனுகூலப் பலன்களை பெற்று தரும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். நிதி நிலைமை இன்று சுமூகமாக இருக்காது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து போவதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்ப்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். தடை! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

கூட்டு வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். ஒரு சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உருவாகும். அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தூரத்து சொந்தக்காரர்களிடமிருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். குடும்ப நலனுக்காக தேவையற்ற செலவுகளை செய்யலாம். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

இத்தனை நாட்களை மனதில் இருந்துவந்த சில விஷயங்களுக்கு புரிதலும், தெளிவும் ஏற்படும். குழப்பம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன்பு சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளவும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவு கவலையை அளிக்கும். கண் சார்ந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | விருப்பங்கள் நிறைவேறும் நாள்.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

உங்க விருப்பங்களை அடைவதற்கு சாதகமான நாள். பணியில் உங்களுடையை புத்திசாலித்தனத்தை பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும். இல்லற வாழ்வில் அமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்பார்க்காத லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.  குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக உள்ளது, எந்த பிரச்சனையும் இல்லை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்